2025 முதல் EPFO விதிகளில் 5 முக்கிய மாற்றங்கள்! நல்லா நோட் பண்ணிக்கோங்க!

First Published | Dec 26, 2024, 4:31 PM IST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை புத்தாண்டில் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் பல புதிய வசதிகளும் கிடைக்கும்.

EPFO New Rules 2025

EPFO புதிய விதிகளின் முதன்மை நோக்கம், PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அவர்களின் ஓய்வூதிய நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுவதும் ஆகும். இந்த மாற்றங்களால் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இருவரும் பயனடைவார்கள்.

EPFO ATM Withdrawal

EPFO சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் நிதியை எடுத்துக்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டை வழங்க EPFO ​​முடிவு செய்துள்ளது. இந்த ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி 2025-26 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

EPFO employee’s contribution limit

மற்றொரு முக்கிய மாற்றம் ஊழியர்களுக்கான EPF பங்களிப்பு வரம்பை நீக்குவதாகும். தற்போது, ​​ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12% EPF கணக்கில் செலுத்துகின்றனர். இருப்பினும், EPFO-நிர்ணயித்த ரூ.15,000க்கு பதிலாக ஊழியர்களின் உண்மையான சம்பளத்தின் அடிப்படையில் பங்களிக்க அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்கள் ஓய்வுக்குப் பின், ஒவ்வொரு மாதமும் அதிக ஓய்வூதியத்தைப் பெற முடியும்.

EPFO system upgrade

EPFO அதன் IT உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. சந்தாதாரர்கள் எளிமையாக டிஜிட்டல் முறையில் PF பணத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும். இந்த அப்கிரேடு ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டவுடன், EPFO உறுப்பினர்களின் விண்ணப்பங்களுக்கு விரைவாக  தீர்வு காணப்படும். வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். மோசடிக்கான வாய்ப்பும் குறையும்.

EPFO equity investment

EPFO அதன் உறுப்பினர்களை எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகளுக்கு (ETFs) அப்பால் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்கும் வசதியை வழங்கும். EPFO நேரடி ஈக்விட்டி முதலீட்டை அனுமதித்தால், உறுப்பினர்கள் அதிக வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.

EPFO pension

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு பயனுள்ள வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துவருகிறது. புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர், கூடுதல் சரிபார்ப்பு தேவையில்லாமல், நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையைப் பெற முடியும். எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம் என்ற நெகிழ்வுத்தன்மை இருப்பதால், காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறையும்.

Latest Videos

click me!