2 ரூபாய் உங்க கிட்ட இருந்தா, 5 லட்சம் ரூபாய் உங்களுக்காக வெயிட்டிங்!

Published : Dec 28, 2024, 08:56 PM IST

உங்களிடம் சில பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் இருந்தால், அவற்றை விற்று எளிதாக பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக, உங்களிடம் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் விற்று பெரிய தொகையை வீட்டில் இருந்தபடியே சம்பாதித்துவிடலாம்.

PREV
18
2 ரூபாய் உங்க கிட்ட இருந்தா, 5 லட்சம் ரூபாய் உங்களுக்காக வெயிட்டிங்!

இன்றைய உலகில் எல்லோரும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. பணக்காரனாக மாறுவது எளிதான காரியம் அல்ல. அதற்கு இரவுபகலாக கடின உழைப்பு தேவை. அதற்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும்.

28

பலர் அயராது உழைத்தாலும், வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். சிலர் தங்கள் கனவுகளை நனவாக்க தங்கள் வழக்கமான வேலையைத் தவிர கூடுதல் வேலைகளையும் செய்கிறார்கள். ஆனால், வீட்டில் உட்கார்ந்துகொண்டே பணக்காரர் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.

38
Old 2 rupees note value

நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இது வேடிக்கை அல்ல. பழங்கால பொருட்களை சேகரிப்பதில் பலருக்கு ஆர்வம் உள்ளது. குறிப்பாக, இப்போதெல்லாம் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்க பலர் காத்திருக்கிறார்கள்.

48
Old 2 rupees note

உங்களிடம் சில பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் இருந்தால், அவற்றை விற்று எளிதாக பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக, உங்களிடம் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் விற்று பெரிய தொகையை வீட்டில் இருந்தபடியே சம்பாதித்துவிடலாம்.

58
Old 2 rupees note value

பழைய 2  ரூபாய் நோட்டு இருந்தால், அதை சுலபமாக ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கலாம். ஆனால் அது சாதாரண நோட்டாக இருக்கக் கூடாது. உங்களிடம் உள்ள 2 ரூபாய் நோட்டில் 786 என்ற எண் இடம்பெற்றிருக்க வேண்டும்.  அதிர்ஷ்டமாக கருதப்படும் 786 எண் கொண்ட நோட்டுகளை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

68
Old 2 rupees note

இந்த நோட்டை வாங்குபவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளனர். அந்த 2 ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங்கின் கையெழுத்துடன் இருக்க வேண்டும். இந்த அரிய ரூபாய் நோட்டை ஈபே (eBay), கிளிக் இந்தியா (Click India), ஓஎல்எக்ஸ் (OLX) போன்ற இணையதளங்களில் விற்கலாம்.

78
Old 2 rupees note value

இந்த இணையதளங்களில் விற்பனையாளராக உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களிடம் உள்ள பழைய நாணயத்தின் இருபுறத்தையும் தெளிவாகப் படம் எடுத்துப் பதிவேற்றுங்கள். நோட்டில் உள்ள சிறப்புகளையும் குறிப்பிடுங்கள். உங்கள் பதிவைப் பார்த்து யாராவது உங்கள் நாணயத்தை வாங்க முன்வருவார்கள்.

88
Old 2 rupees note value

பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் போன்றவற்றை ஆன்லைனில் வாங்குவதையோ விற்பதையோ ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories