பிராண்ட் பொருட்கள் vs டி-மார்ட் பிராண்ட்: டி-மார்ட்டின் சொந்த பிராண்டுகளான Premia (மளிகைப் பொருட்கள்) மற்றும் DMart Homes/Unique (வீட்டு உபயோகப் பொருட்கள்) ஆகியவற்றின் தரம் முன்னணி பிராண்டுகளுக்கு இணையாக இருக்கும். பிரபல பிராண்டுகளை விட இவைகளின் விலை 10% முதல் 30% வரை குறைவாக இருக்கும். ஆகவே இவற்றை வாங்கி பணத்தை மிச்சபப்டுத்தலாம்.
'Buy 1 Get 1' மற்றும் காம்போ ஆஃபர்கள்
சோப், பேஸ்ட், ஷாம்பூ மற்றும் துணி துவைக்கும் பவுடர்களில் BOGO (Buy 1 Get 1) அல்லது பெரிய பேக் (Combo Packs) வாங்கும்போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். காலாவதியாகும் தேதியை (Expiry Date) மட்டும் பார்த்து வாங்குவது அவசியம்.
டி-மார்ட் ரெடி (DMart Ready App) பயன்படுத்துங்கள்
நேரில் சென்று வாங்கும் முன் DMart Ready செயலியில் (App) பொருட்களின் விலையை சரிபார்த்துக் கொள்ளலாம். சில சமயம் ஆப் வழியே ஆர்டர் செய்து 'Pick-up Point' மூலம் பெற்றுக் கொண்டால் கூடுதல் தள்ளுபடியும், நேரமும் மிச்சமாகும்!