Crorepathi Formula : வெறும் 67 ரூபாயை ஒரு கோடி ரூபாயா மாற்றும் வித்தை தெரியுமா? சக்சஸ் ஃபார்முலா இதோ!

Published : Jul 10, 2026, 11:09 AM IST

Crorepathi Formula : முறையான முதலீட்டின் மூலம் நீண்ட காலத்தில் ₹1 கோடி சொத்தை உருவாக்க முடியும். கூட்டு வட்டியின் பலன், இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்குதல் மற்றும் சரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை இந்த இலக்கை அடைய முக்கியமானவை.

PREV
17
எதிர்காலத்தில் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

ஒரு நாளைக்கு 67 ரூபாய் என மாதம் வெறும் ₹2,000 முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு கோடி ரூபாயை ஈட்ட முடியுமா? என்ற சந்தேகம் பல முதலீட்டாளர்களுக்கும் உள்ளது. இதற்குப் பதில்: நிச்சயமாக முடியும்! ஆனால் இது ஒரே நாளில் அல்லது சில ஆண்டுகளில் நடந்துவிடாது. நீண்ட காலத்திற்குத் திட்டமிட்டு, ஒழுக்கமான முறையில் முதலீடு செய்வதே இதற்கு அடிப்படை. சரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், காலப்போக்கில் மிகப்பெரிய சொத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, நீங்கள் இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால், 'கூட்டு வட்டி' (Compounding) விளைவின் காரணமாக, சிறிய முதலீடு கூட பிற்காலத்தில் பெரும் நிதியாக உருவெடுக்கும்.

27
எவ்வளவு காலம் ஆகும்?
மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல மாசம் ₹2,000 முதலீடு செஞ்சா, சராசரியா 10%-15% வருமானம் கிடைச்சா, சுமார் 28-38 வருஷத்துல ₹1 கோடி இலக்கை அடையலாம். இந்த கணக்கு, நீண்ட கால சந்தை வளர்ச்சியைப் பொறுத்தது. ஆன்லைன் கால்குலேட்டர்கள்ல நீங்களே இதைக் கணக்குப் போட்டு பார்க்கலாம்.
37
முதலீட்டில் 'நேரம்' தான் முக்கியம்!
SIP-ல உங்க பணம் பெருக கூட்டு வட்டி (Compounding) தான் முக்கிய காரணம். ஆரம்பத்துல உங்க முதலீடு மட்டும் வளரும். போகப்போக, அதுல வர்ற லாபமும் சேர்ந்து வளரும். இதனாலதான், நிதி நிபுணர்கள் 'டைமிங்கை' விட 'டைம்' தான் முக்கியம்னு சொல்றாங்க. எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறீங்களோ, அவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்கலாம்.
47
சின்ன வயசுல முதலீட்டை ஆரம்பிச்சா என்ன லாபம்?
22-25 வயசுல மாசம் ₹2,000 SIP ஆரம்பிச்சா, கூட்டு வட்டி மூலமா ₹1 கோடியை ஈஸியா சம்பாதிக்கலாம். ஆனா, 40 வயசுல ஆரம்பிச்சா, இதே இலக்கை அடைய அதிக பணம் கட்டணும். அதனால, சீக்கிரம் ஆரம்பிக்கிறது நல்லது. இதனால 'Rupee Cost Averaging' மூலமா மார்க்கெட் ஏற்ற இறக்க ரிஸ்க்கும் குறையும்.
57
சரியான மியூச்சுவல் ஃபண்ட் அவசியம்!
₹1 கோடி இலக்கை அடைய, சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கிறது ரொம்ப முக்கியம். லார்ஜ்-கேப் ஃபண்டுகள்ல ரிஸ்க் குறைவு, சுமார் 10% வரை நிலையான வருமானம் கிடைக்கும். ஸ்மால்-கேப் ஃபண்டுகள்ல லாபம் அதிகம், ஆனா ரிஸ்க்கும் அதிகம். பழைய வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும்னு எந்த உத்தரவாதமும் இல்லை. எல்லாமே சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
67
சீக்கிரமா ₹1 கோடி சம்பாதிக்கணுமா?

சம்பளம் உயரும்போது, ஒவ்வொரு வருஷமும் SIP தொகையை 10% அல்லது 15% அதிகப்படுத்துவது நல்லதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க. இப்படி செஞ்சா, ₹1 கோடி இலக்கை சீக்கிரமாவே அடையலாம். வருஷத்துக்கு ஒருமுறை உங்க முதலீடுகளை ஆய்வு செய்றதும் ஒரு நல்ல உத்தி. பொறுமை, ஒழுக்கம், நீண்ட காலப் பார்வை இருந்தா, சின்ன தொகையிலயும் பெரிய இலக்கை அடைய முடியும்.

New Financial Rules : ஜூலை 1 முதல் புதிய ரூல்ஸ்! கவனிக்க தவறினால் பண இழப்பு நிச்சயம்!

77
கவனத்திற்கு!

கவனத்திற்கு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 10%, 12%, 15% வருமானம் வெறும் ஒரு கணக்கீட்டிற்காக மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருமானம், எதிர்கால லாபத்திற்கு உத்தரவாதம் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் பணத்திற்கு ஏசியாநெட் நியூஸ் தமிழ் பொறுப்பாகாது.

Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories