கிரெடிட் கார்டுக்கு மாதத் தவணையைச் செலுத்தும்போது குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவது, தற்காலிகமாக கடனை கட்டுக்குள் வைக்க உதவும். இருந்தாலும் வட்டி உயர்ந்துகொண்டே செல்வதற்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிய முழு தொகையையும் செலுத்திவிடுவது நல்லது. இதன் மூலம் விரைவாக கடனில் இருந்து விடுபட முடியும்.
கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்த கடினமான நிலையில் இருந்தால், வங்கியைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வங்கி சார்பில் கிரெடிட் கார்டு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்து உதவுவார்கள்.
பொருட்கள் வாங்குவதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதனால் கடன் சுமை அதிகரித்து, கடனிலிருந்து மீள முடியாமல் போகும். எனவே கையில் இருக்கும் பணத்தை அனுசரித்து அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யுங்கள்.
செலவு செய்திருப்பதைப் பற்றி அறிந்துகொள்ள கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்டைப் அடிக்கடி பார்ப்பது நல்லது. இதன் மூலம் இதற்காக அதிகம் செலவு செய்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதற்கு ஏற்ப செலவுகளைக் கட்டுப்படுத்தி கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முடியும்.
கடன் வாங்கியதை பிறருக்குத் தெரியாமலே திரும்பச் செலுத்த வேண்டும் என்று நினைத்து, நெருக்கடியான நேரத்தில் உதவி கேட்காமல் இருக்கக் கூடாது. கிரெடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்த வழிகாட்டும் ஆலோசகர்கள் உள்ளனர். தேவையான தருணத்தில் அவர்களின் உதவியை நாடலாம்.