அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தை நிலவரப்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்ட அடுத்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை என்ன என்பதை பார்ப்போம்.

Commercial LPG cylinders price reduced tvk
எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

Commercial LPG cylinders price reduced tvk
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு எரிவாயு சிலிண்டர் விலை

அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. 

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு இனி கவலையில்லை! கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சூப்பர் முடிவு!
 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

இந்நிலையில், ஏப்ரல்1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  அதிரடியாக குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,965க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50ஆக விற்பனையாகிறது.  இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிப்பவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

vuukle one pixel image
click me!