Change Your Budgeting Rule Today: பட்ஜெட் போடும் முறையை மாற்றுங்கள்.! இந்த 1 ரூல் போதும், உங்கள் நிதி நிலைமை தலைகீழாக மாறிவிடும்!

Published : Nov 09, 2026, 01:33 PM IST

சம்பளம் வந்ததும் செலவு செய்துவிட்டு மீதியை சேமிக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்! 'முதலில் முதலீடு, அப்புறம்தான் செலவு' என்ற எளிய விதியை உங்கள் பட்ஜெட்டில் பின்பற்றுவதன் மூலம், கூட்டு வட்டியின் மேஜிக்கால் நீங்களும் கோடீஸ்வரராக மாறலாம்.

PREV
110
சம்பளத்தில் ஒரு முதலீடு

உலகளவில் கோடீஸ்வரர்களைச் சோதித்துப் பார்த்தால், சொந்தத் தொழில் அல்லது பிசினஸ் மூலம் உயர்ந்தவர்களைக் காட்டிலும், சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். "சம்பளம் வந்ததும் செலவு செய்துவிட்டு, மீதியைச் சேமிக்கலாம்" என்ற பழைய முறையை மாற்றி, "சம்பளத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துவிட்டு, மீதித் தொகைக்கு பட்ஜெட் போட வேண்டும்" என்பதே நம் நிதி நிலைமையை உடனடியாகத் தலைகீழாக மாற்றும் அந்த ஒற்றை ரகசியம்!

210
சம்பளம் வாங்கும் முறை மாற வேண்டும்!

நம்மில் பெரும்பாலோர் சம்பளம் கிடைத்தவுடன் வீட்டு வாடகை, போக்குவரத்து, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு போன்றவற்றுக்குச் செலவழித்துவிட்டு, இறுதியில் மிச்சமிருந்தால் மட்டுமே சேமிப்போம் அல்லது முதலீடு செய்வோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.

இதற்கு மாற்றாக, ஒருவரின் மாதச் சம்பளம் 30,000 ரூபாய் எனில், அதில் குறைந்தது 20 சதவீதமான 6,000 ரூபாயை முதலீட்டுக்கெனத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை மட்டுமே இதர செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆரம்பக் காலத்தில் இந்த முறை சற்று சிரமமாகத் தோன்றலாம்; ஆனால், இது ஒரு நல்ல பழக்கமாக மாறிவிட்டால், எதிர்காலத்தில் நீங்களும் எளிதில் பணக்காரராகலாம்.

310
கூட்டு வட்டியின் (Power of Compounding) அற்புதம்

பெரிய தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்வது மட்டுமே முதலீடு கிடையாது. "சிறுதுளி பெருவெள்ளம்" என்பது போல, மாதந்தோறும் சிறிய தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே எதிர்காலத்தில் பெரும் செல்வம் சேரும்.

உதாரணமாக, ஒரு நபர் தனது 30-வது வயதில் மாதம் 3,000 ரூபாய் முதலீட்டைத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் தனது 60-வது வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டைத் தொடர்கிறார். அவர் செய்த மொத்த முதலீடு வெறும் 10.80 லட்சம் ரூபாயாக மட்டுமே இருக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) போன்ற பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாகக் கொண்டால், அந்தத் தொகை சுமார் 97 லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும்!

இந்த 97 லட்சம் ரூபாயை வயதான காலத்தில் ரிஸ்க் இல்லாத ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தால், 10% வட்டி விகிதத்தின்படி ஆண்டுக்கு 9.7 லட்சம் ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். அதாவது, மாதந்தோறும் சுமார் 80,830 ரூபாய் எவ்வித உழைப்புமின்றி வருமானமாகக் கிடைக்கும். கூட்டு வட்டியின் வளர்ச்சியால், நாம் செலுத்திய அசலை விட அதிலிருந்து கிடைக்கும் வட்டியே பல மடங்கு அதிகமாக இருக்கும்.

410
மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு மற்றும் இலக்கு சார்ந்த முதலீடு

நாம் மேலே 12% வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம். ஆனால், பல சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 15% அல்லது அதற்கு மேற்பட்ட லாபத்தைத் தந்துள்ளன. அப்படிப்பட்ட சிறப்பான திட்டங்களில் முதலீடு செய்யும்போது, 30 ஆண்டுகளின் முடிவில் அந்தத் தொகை 2 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கோடீஸ்வர அந்தஸ்தை எளிதில் பெற்றுத் தரும்.

பலரின் பொதுவான புலம்பல்: "நாங்களும் பல வருடம் தொடர்ந்து முதலீடு செய்தோமே, ஆனால் கோடீஸ்வரர் ஆகவில்லையே" என்பதுதான். இதற்கு முக்கியக் காரணம், இடையில் எழும் சிறுசிறு அவசரச் செலவுகளுக்காகச் சேர்த்து வைத்த முழுத் தொகையையும் எடுத்துச் செலவழித்துவிட்டு, மீண்டும் முதலீட்டைத் தொடர மறந்துவிடுவதாகும்.

510
வெற்றிக்கான பொன்னான விதிகள்
  • இலக்கு நிர்ணயித்தல்: உங்களின் ஒவ்வொரு முதலீடும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (குழந்தைகளின் கல்வி, திருமணம், சொந்த வீடு அல்லது ஓய்வூதியக் காலம்) அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இலக்குகள் தெளிவாக இருந்தால், அவசரமின்றி பணத்தை நடுவில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
  • பொறுமை அவசியம்: பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் குறுகிய கால இறக்கங்களைக் கண்டு பயந்து வெளியேறக் கூடாது. நீண்ட கால நோக்கில் முதலீட்டைத் தொடர்வதே உங்களை வளமாக்கும்.

இன்றே உங்களின் பட்ஜெட் போடும் முறையை மாற்றுங்கள்; முதல் செலவை முதலீட்டாக மாற்றுங்கள். உங்கள் எதிர்காலம் நிம்மதியாகவும், தன்னிறைவுடனும் அமையும்!

610
பணவீக்கத்திற்கேற்ப முதலீட்டை உயர்த்தலாம்

ஆண்டுதோறும் உங்கள் சம்பளம் உயரும்போது, அதற்கேற்ப உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தொகையையும் குறைந்தபட்சம் 10% முதல் 15% வரை உயர்த்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

710
சப்ஸ்கிரிப்ஷன்களைக் குறைத்தல்

ஓடிடி (OTT) தளங்கள், ஜிம் மெம்பர்ஷிப் மற்றும் பயன்பாட்டில் இல்லாத மாதாந்திர சந்தாக்களைத் (Subscriptions) தொடர்ந்து சோதித்து, தேவையில்லாத சேவைகளை ரத்து செய்வதன் மூலம் கணிசமான பணத்தை மிச்சப்படுத்தலாம்.

810
'24 மணிநேர' விதி

விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் அல்லது திட்டமிடாத ஆன்லைன் ஷாப்பிங் செய்யத் தோன்றும் போது, உடனடியாக வாங்குவதைத் தவிர்த்து 24 மணிநேரம் யோசிக்கவும். ஒரு நாள் கழித்து யோசிக்கும்போது அந்தப் பொருள் உண்மையில் தேவையா இல்லையா என்பது உங்களுக்குப் புரியும்.

910
தானியங்கு சேமிப்பு (Automated Savings):

சம்பளம் வந்தவுடன் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொதி நேராக உங்களின் சேமிப்பு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கிற்குத் தானாக மாற்றப்படும் (Auto-debit) வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் செலவழித்தபின் சேமிக்கலாம் என்ற எண்ணம் தவிர்க்கப்படும்.

1010
50/30/20 விதி

உங்களின் மாத வருமானத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும். 50% அத்தியாவசியத் தேவைகளுக்கும் (வாடகை, மளிகை), 30% விருப்பச் செலவுகளுக்கும் (பொழுதுபோக்கு, ஷாப்பிங்), மீதமுள்ள 20% கட்டாய சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கும் ஒதுக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories