செபி, ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், நிதி அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்க விற்பனையைக் கண்காணிக்கின்றன. இதற்கு மாற்றாக அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நகை வியாபாரிகள் பரிந்துரை செய்கின்றனர். இது தங்கம் வாங்குவது தொடர்பான நடைமுறையை எளிமைப்படுத்தும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.