''பெரும்பாலான குடும்ப நகைகள் தலைமுறை தலைமுறையாக ஒப்படைக்கப்பட்டு, எந்த பதிவுகளையும் பராமரிக்க முடியாத நிலையில், நகைகளுக்கான உரிமைச் சான்றை விவசாயிகள் எவ்வாறு பெற முடியும்? வங்கிகள் தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளர்களைக் கொண்டுள்ளன.
அவர்களின் பணி அனைத்து அளவுருக்களிலும் தங்கத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதாகும். எனவே, விவசாயிகளை நகைக்கான சான்றிதழைப் பெறச் சொல்வது அவர்களை துன்புறுத்தும் செயலாகும்'' என்று பெருமாள் கூறினார்.
ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செயய் வேண்டும்
மேலும் பேசிய பெருமாள், ''ரிசர்வ் வங்கியின் புதிய செயல்முறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில் அவர்கள் அதைப் பெற தங்கள் வீடுகளிலிருந்து வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, புதிய ரிசர்வ் வங்கி வரைவை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையைத் தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.