Bank Holidays December :டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதிலும் மாநில வாரியாகவும் மொத்தம் 10 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வரும் மாதத்தில் மொத்தம் 10 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. வழக்கமான நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமை விடுமுறைகளுடன் சேர்த்து, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் விடுமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
26
ஆர்பிஐ
அடுத்த மாதமான டிசம்பரில் வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வங்கிகள் செயல்படாது.
36
பல விடுமுறைகள்
இந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் முதல் ஷேக் முகமது அப்துல்லா ஜெயந்தி, ஹஜ்ரத் அலி பிறந்தநாள் வரை பல விடுமுறைகள் உள்ளன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்தும் நாடு முழுவதும் பொருந்தாது.
டிசம்பர் மாதத்தில் 1, 3, 9, 11, 18, 19, 24, 26, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தில் சுதேசி தர்ம தினம், மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி விடுமுறை. கோவாவில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பண்டிகைக்கு டிசம்பர் 3ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
56
வங்கிகளுக்கு விடுமுறை
மேகாலயாவில் யு சோசோ தாம் நினைவு தினத்திற்காக டிசம்பர் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 அன்று மேகாலயா, மிசோரம், நாகாலாந்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
66
அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்
இது தவிர ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 6, இரண்டாவது சனிக்கிழமை டிசம்பர் 12, ஞாயிறு டிசம்பர் 13, ஞாயிறு டிசம்பர் 20, நான்காவது சனிக்கிழமை டிசம்பர் 26 மற்றும் டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.