லோன் NOC வழங்க பேங்க் இழுத்தடிக்கிறதா? தினமும் ரூ.5,000 அபராதம் வசூலிக்கலாம்; ஆர்.பி.ஐ அதிரடி விதி!

Published : Nov 23, 2026, 02:19 PM IST

வங்கியில் கடன் அடைத்த 30 நாட்களுக்குள் NOC வழங்காவிட்டால், 31-ஆவது நாளிலிருந்து வங்கி தினமும் ரூ.5,000 அபராதம் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இதோ.

PREV
14
லோன் NOC பேங்க் விதிமுறைகள்

வங்கியில் கடன் வாங்கி அதனை முழுமையாக அடைத்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து 'தடையில்லாச் சான்று' (NOC) பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவேளை வங்கிகள் NOC வழங்கத் தாமதம் செய்தால், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகள் என்ன சொல்கின்றன? வாடிக்கையாளர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விரிவான தகவல்களை பற்றி பார்ப்போம்.

24
கடன் முடிந்ததற்கான உண்மையான ஆதாரம் எது?

வங்கியில் கடன் வாங்கி மாதா மாதம் தவணை (EMI) செலுத்திவிட்டு, கடைசி மாதத் தவணையைக் கட்டியவுடன் கடன் முழுமையாக முடிந்துவிட்டதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால், கடன் தவணை முடிவடைவது என்பது பணப்பரிவர்த்தனை மட்டுமே நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும். உங்களது கடன் கணக்கு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துவிட்டது என்பதற்கான உண்மையான சான்று வங்கி வழங்கும் NOC (No Objection Certificate / No Dues Certificate)-யில் தான் உள்ளது. உங்களுக்கு வங்கியில் எந்தக் கடனும் பாக்கி இல்லை என்பதற்கான சட்டப்பூர்வ ஆதாரம் இதுவே ஆகும்.

34
NOC பெறாவிட்டால் ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்

வாகனக் கடன் (Vehicle Loan) - வாகனத்திற்காக வாங்கிய கடனுக்கு NOC பெறவில்லை என்றால், வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் (RC Book) உள்ள வங்கியின் உரிமை (Hypothecation) நீக்கப்படாது. வங்கி NOC வழங்கினால் மட்டுமே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம் வங்கியின் பெயரை நீக்க முடியும்.

வீட்டுக் கடன் (Home Loan) - வீட்டுக் கடனை முழுமையாக அடைத்த பிறகும் NOC வாங்காவிட்டால், சம்பந்தப்பட்ட சொத்தின் மீதான வங்கியின் உரிமை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.

சிபில் ஸ்கோர் பாதிப்பு - கடன் கணக்கு முறையாக முடிக்கப்படாவிட்டால், சிபில் (CIBIL) அறிக்கையில் உங்களது கடன் இன்னும் 'செயல்பாட்டில்' (Active) இருப்பதாகவே காட்டப்படும். இது உங்களது சிபில் ஸ்கோரைக் கடுமையாகப் பாதிக்கும்.

44
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்

கடன் கணக்குகளை முடிப்பது மற்றும் NOC வழங்குவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் கடனை முழுமையாக அடைத்த 30 நாட்களுக்குள் வங்கி கட்டாயம் NOC-யை வழங்கியிருக்க வேண்டும். ஒருவேளை 30 நாட்களுக்குள் வழங்கத் தவறினால், 31-ஆவது நாளிலிருந்து தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வங்கி வாடிக்கையாளருக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகள்

கடனை முழுமையாக அடைத்த பிறகு, 30 நாட்களுக்குள் வங்கியிடமிருந்து மறக்காமல் NOC சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனக் கடன் வாங்கியிருந்தால், NOC பெற்றவுடன் RTO அலுவலகத்திற்குச் சென்று RC புத்தகத்திலுள்ள வங்கியின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

வீடு அல்லது சொத்துக் கடன் வாங்கியிருந்தால், சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் சொத்தின் மீதான வங்கியின் உரிமையை முறைப்படி நீக்கிக்கொள்ள வேண்டும்.

கடன் முடிந்து சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள், உங்களது சிபில் அறிக்கையில் அந்தக் கடன் கணக்கு 'Closed' எனப் பதிவாகியுள்ளதா என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories