Baba Vanga Gold Price Prediction: இன்னைக்கு தங்கம் விலை கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இந்த சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்காதுபோல. பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பாபா வாங்காவின் ஒரு கணிப்பு, பலரோட தூக்கத்தையே கெடுத்துருக்கு.
இன்னைக்கு, அதாவது ஏப்ரல் 23-ம் தேதி, தங்கச் சந்தையில் ஒரு சின்ன நிம்மதி கிடைச்சிருக்கு. IBJA (இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன்) தகவலின்படி, 24 காரட் தங்கம் விலை 927 ரூபாய் குறைந்து, 10 கிராமுக்கு 1.51 லட்சம் ரூபாயாக இருக்கு. ஏப்ரல் 22-ம் தேதி இது 1.52 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனா, நிபுணர்கள் இது 'புயலுக்கு முந்தைய அமைதி'யாக இருக்கலாம்னு சொல்றாங்க.
25
தங்கத்தின் விலை பற்றி பாபா வாங்காவின் எச்சரிக்கை
'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, 2026-ம் ஆண்டுக்கு ஒரு பயங்கரமான கணிப்பைச் சொல்லியிருக்கார். அவர் கணிப்பின்படி, 2026-ல் உலகம் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியைச் (Financial Crisis) சந்திக்கும். வங்கி அமைப்பு மொத்தமாகச் சரிந்துவிடும். மக்கள் காகிதப் பணம் மற்றும் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, எல்லோரும் தங்கத்தை வாங்க ஓடுவார்கள். இதனால, தங்கத்தோட தேவை அதிகமாகி, அதன் விலை 25% முதல் 40% வரை உயரலாம். அதாவது, இன்னைக்கு 1.51 லட்சமாக இருக்கும் தங்கம், கண்ணிமைக்கும் நேரத்தில் 1.9 லட்சத்தில் இருந்து 2.1 லட்சம் ரூபாய் வரை போகலாம்ன்னு பாபா வங்கா சொல்லியிருக்காங்க.
35
தங்கத்தின் விலை குறித்து சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாபா வாங்காவின் கணிப்பு மட்டுமல்ல, ஜேபி மார்கன் மற்றும் மார்னிங்ஸ்டார் போன்ற பெரிய நிறுவனங்களின் ஆய்வாளர்களும் இதே போன்ற ஒரு விஷயத்தைத்தான் சொல்றாங்க. உலகில் நடக்கும் போர்கள் (ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா பதற்றம் போன்றவை) மற்றும் பணவீக்கம் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். சில நிபுணர்கள், 2030-க்குள் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டாலரை, அதாவது 10 கிராமுக்கு சுமார் 4.28 லட்சம் ரூபாயை எட்டக்கூடும் என்று கணிக்கின்றனர். ஆனாலும், இது வெறும் ஒரு கணிப்பு மட்டுமே.
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு வருமானம் தந்துள்ளது?
கடந்த 10 ஆண்டுகளின் பதிவுகளைப் பார்த்தால், தங்கம் மக்களின் பணத்தை 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. 2016-ல் 8.5 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால், இன்று அதன் மதிப்பு 29 லட்சம் ரூபாய்க்கும் அதிகம். அதாவது, கஷ்ட காலத்தில் தங்கம் ஒரு சிறந்த நண்பனாக இருந்திருக்கிறது.
55
தங்கம் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள் மீது என்ன தாக்கம்?
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, திருமணம் மற்றும் அந்தஸ்துடன் தொடர்புடையது. பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகி, விலை 2 லட்சத்தைத் தாண்டினாலோ அல்லது நிபுணர்களின் கணிப்புப்படி 4 லட்சத்தைத் தாண்டினாலோ, நடுத்தர வர்க்கத்தினர் நகை வாங்குவது ஒரு கனவாகவே மாறிவிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடக அறிக்கைகள், வரலாற்றுத் தரவுகள் மற்றும் கணிப்புகளை (பாபா வாங்கா) அடிப்படையாகக் கொண்டவை. 'பாபா வாங்கா'வின் கணிப்புகள் நாட்டுப்புற நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகும், அவற்றை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உலகளாவிய சந்தை, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரச் சூழல்களைப் பொறுத்தது. எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன், உங்கள் நிதி ஆலோசகர் (Financial Advisor) அல்லது சந்தை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.