வீட்டுக் கடன், வண்டிக் கடன் என எந்தக் கடனாக இருந்தாலும், கடனை முடிக்கும்போது சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஃபோர்-க்ளோஷர் கட்டணங்கள், NOC சான்றிதழ், சொத்து ஆவணங்கள், லீன் நீக்கம் மற்றும் சிபில் ஸ்கோர் போன்றவற்றைச் சரிபார்த்து, எதிர்காலப் பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும்.
வீடு, கார் கடன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இது தெரியாம கடனை அடைக்காதீங்க!
வீட்டு கடன் வாங்கும்போது வட்டி விகிதம், கடன் காலம்னு நிறைய விஷயங்கள கவனிப்போம். ஆனா, கடனை முடிக்கும்போது, அதாவது லோன் க்ளோஸ் பண்ணும்போது, இந்த விஷயங்கள கவனிக்க மாட்டோம். இது நமக்குப் பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணும். அதனால, லோன் க்ளோஸ் பண்ணும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்கணும்னு பார்க்கலாம்.
26
வீட்டு கடன்
சொன்ன காலத்துக்கு முன்னாடியே கடனை அடைச்சா, நிறைய வங்கிகளும் NBFCகளும் அபராதம் அல்லது கட்டணம் வசூலிப்பாங்க. வீட்டுக் கடனுக்குப் பொதுவா அபராதம் கிடையாது. ஆனா, வண்டிக் கடன், தனிநபர் கடனுக்கு முன்கூட்டியே கட்டினா அபராதம் வசூலிப்பாங்க. அதுவும் பாக்கி இருக்கற கடனோட 1% ல இருந்து 5% வரைக்கும் இருக்கும். அதனால, முன்கூட்டியே கடனை அடைக்கறதுக்கு முன்னாடி, ஃபோர்-க்ளோஷர் கட்டணங்களப் பாருங்க.
36
வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள்
NOC என்றால் நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட். கடனை முழுசா அடைச்சிட்டோம்னு சொல்ற சான்றிதழ் இது. அதாவது, அந்த அக்கவுண்ட்ல எந்தப் பாக்கியும் இல்ல, கடன் கொடுத்தவங்களுக்கும் கடன் வாங்கினவங்களுக்கும் இடையில எல்லாப் பரிமாற்றமும் முடிஞ்சிடுச்சுன்னு சொல்ற சான்றிதழ் ஆகும். அதனால, NOC வாங்குறது ரொம்ப முக்கியம். கடன் வாங்கினவங்களோட பேர், முகவரி, லோன் அக்கவுண்ட் நம்பர், ஃபோர்-க்ளோஷர் விவரங்கள்னு எல்லாமே சரியா இருக்கான்னு பாருங்க.
46
வீட்டுக் கடன் ஆவணங்கள்
வீட்டுக் கடன் வாங்கும்போது, வங்கிகளுக்கு நிறைய ஆவணங்களக் கொடுக்கணும். அதுலயும் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள்தான் முக்கியம். விற்பனை ஒப்பந்தம், சொத்துப் பத்திரம், சொசைட்டி அல்லது பில்டர்கிட்ட இருந்து வாங்கின NOCனு நிறைய ஆவணங்களைக் கொடுக்கணும். கடன் முடிஞ்சதும், எல்லா முக்கியமான ஆவணங்களையும் திரும்ப வாங்கியாச்சான்னு பாருங்க.
56
வாகனக் கடன்
லீன், அதாவது கடன் வாங்கினவங்களுக்குச் சொத்தை வச்சுக்கற உரிமை. இத நீக்கணும். இல்லன்னா, சொத்தை விக்கறதுக்குப் பிரச்சன வரும். வீட்டுக் கடனை அடைச்ச பிறகு, சொத்துல இருக்கற லீனை நீக்கறதுக்கு, வங்கிப் பிரதிநிதியோட ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குப் போகணும். வண்டிக் கடன்னா, ஹைப்போதெக்கேஷனை நீக்கறதுக்கு RTO ஆபீஸுக்குப் போகணும். கடன் முடிச்ச பிறகு, சிபில் ஸ்கோரப் பாருங்க. சரியான நேரத்துல கடனை அடைச்சா, சிபில் ஸ்கோர் அதிகமாகும்.
66
கடன் அடைக்கும் போது கவனிக்க வேண்டியவை
இந்தத் தகவல்களை டேட்டாபேஸ்ல அப்டேட் பண்றது வங்கியோட வேலை. ஆனா, சில சமயங்கள்ல வங்கிகள் இதைத் தாமதப்படுத்துவாங்க. அப்போ, கடனை முழுசா அடைச்சாலும், கடன் ரிப்போர்ட்ல பாக்கி இருக்க மாதிரி காமிக்கும். இது சிபில் ஸ்கோரக் குறைக்கும். சிபில் ஸ்கோர் குறைஞ்சா, புதுசா கடன் வாங்கறதுக்குக் கஷ்டமாகும். கடனை முன்கூட்டியே அடைச்சாலும் சரி, காலக்கெடுவுக்குள்ள அடைச்சாலும் சரி, இந்த விஷயங்களக் கவனிச்சுக்கோங்க.