Akshaya Tritiya 2026 Gold Price: அட்சய திருதியை நாளில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Published : Apr 16, 2026, 02:55 PM IST

Akshaya Tritiya 2026 : அட்சய திருதியை நாளில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடுமென்று நிபுணர்கள் கணித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதன் உண்மை தன்மை குறித்தும், நிபுணர்கள் கூறியுள்ள கருத்துக்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Akshaya Tritiya 2026 Gold Price

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த புள்ளி விவரங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை ரூ.60,000 வரை அதிகரித்துள்ளது. 

மேலும் அட்சய திருதியை சமயத்தில் தங்கம் விலை ரூ.2 லட்சம் வரை உயரக்கூடும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. ஏப்ரல் 19, 2026 அட்சய திருதியை வரவுள்ள நிலையில், இந்த தகவல் தங்கம் வாங்க காத்திருந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
ஓராண்டில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு

கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை சுமார் ரூ.95,500 ஆக இருந்தது. ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 15, 2026-ல், அதன் விலை ரூ.1,55,570 என்ற அளவை எட்டியுள்ளது. ஒரே வருடத்தில் தங்கம் 63% விலை உயர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டை விட இன்று 10 கிராம் தங்கம் வாங்க நீங்கள் கூடுதலாக ரூ.60,000 செலவழிக்க வேண்டும்.

37
தங்கத்தின் விலை எவ்வளவு உயர வாய்ப்புள்ளது?

நிபுணர்கள் தங்கத்தின் இந்த விலையேற்றம் இப்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்பாது என்று நம்புகிறார்கள். Money Control நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, SMC குளோபல் செக்யூரிட்டீஸ் நிபுணர் வந்தனா பாரதி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதையும், உலக சந்தையில் நிலவும் பதற்றமான சூழலையும் பார்க்கும்போது, அடுத்த அட்சய திருதியை (2027) வருவதற்குள் தங்கம் ரூ.2 லட்சம் என்ற அளவைத் தொடக்கூடும் என்று கூறியுள்ளார். ஆனால் இதை சிலர் இந்த ஆண்டுக்குள் தங்கம் விலை இரண்டு லட்சத்தை தொடும் என்று கூறி இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

47
தங்கம் ஏன் இவ்வளவு விலை உயர்கிறது?

போர் பயம்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றம் (Iran War) முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது. உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, மக்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.

டாலரின் மதிப்பு குறைவு: சர்வதேச சந்தையில் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதிக தேவை: இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் திருமண சீசன் என்பதால், மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குகின்றனர். இதுவும் விலை குறையாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.

57
அட்சய திருதியை: தங்க நகையா அல்லது டிஜிட்டல் தங்கமா?

இப்போதெல்லாம் மக்கள் பெரிய, கனமான நகைகளை மட்டும் வாங்குவதில்லை, முதலீட்டிற்கான புதிய வழிகளையும் நாடுகின்றனர். நிபுணர்களின் கருத்துப்படி, மக்கள் இப்போது Gold ETFs மற்றும் டிஜிட்டல் தங்கம் பக்கம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். டிஜிட்டல் தங்கத்தில் 'செய்கூலி' பிரச்சனை இல்லை, திருடு போய்விடும் என்ற பயமும் இல்லை என்பது இதன் கூடுதல் நன்மை. அட்சய திருதியை அன்று, 24 காரட் தங்க நாணயங்கள் மற்றும் பிஸ்கட்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள், ஏனெனில் எதிர்காலத்தில் அவற்றை விற்பது எளிது.

67
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கலாமா வேண்டாமா?

நீங்கள் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க விரும்பினால், இது சரியான நேரமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அடுத்த ஆண்டு அட்சய திருதியையின் போது விலை ரூ2 லட்சத்தை நோக்கி உயர்ந்தால், இன்றைய ரூ.1.55 லட்சம் கூட உங்களுக்கு மலிவாகத் தோன்றும். உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், கடந்த வாரத்தில் 4% ஏற்றம் கண்ட வெள்ளியையும் (Silver) நீங்கள் கருத்தில் கொள்ளலாம். வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பூஜை சாமான்கள், விளக்குகள், வெள்ளி தட்டுக்கள், வெள்ளிக் குடங்கள், சாமி விக்ரகங்கள் போன்றவற்றை வாங்கி சேமித்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயன் அளிக்கலாம்.

77
பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தங்கத்தின் விலைகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் (உதாரணமாக ₹2 லட்சம் இலக்கு) சந்தை நிலவரம் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் மட்டுமே. தங்கத்தின் விலை உலகளாவிய சூழ்நிலைகள், வரிகள் மற்றும் சந்தை தேவையைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும். இது எந்த வகையிலும் ஒரு முதலீட்டு ஆலோசனை (Investment Advice) அல்ல. எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்வதற்கு முன்பு, உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகரிடம் (Financial Advisor) ஆலோசனை பெறுவது அவசியம். மேலும், உங்கள் நகரத்தில் உள்ள நகைக்கடைகளில் தற்போதைய விலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories