Instant Personal Loan: அவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பர்சனல் லோன் ஈஸியாக கிடைக்க என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கல்விக்கட்டணம், வாகனங்கள் வாங்க, அவசர மருத்துவ செலவுகள் என பல்வேறு செலவுகளை ஈடுகட்ட பர்சல் லோன்களை வாங்கி வருகின்றனர். நமது அவசரத் தேவைகளுக்கு பர்சனல் லோன் தான் கைகொடுக்கிறது. வங்கிகள் உள்பட ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டி, குறைந்த இஎம்ஐ என ஆசைகாட்டி பர்சன்ல் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன.
ஆனால் பெரும்பாலானோர் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிததும் கிடைக்கவில்லை என வருத்தப்படுகின்றனர். பர்சனல் லோன் ஈஸியாக கிடைக்க நீங்கள் சரியான ஆவணங்கள் வைத்திருப்பது மிகவும் அவசியம். பர்சன்ல் லோன் சிரமமின்றி கிடைக்க என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
25
1. பான் கார்டு (Pan Card)
பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் கட்டாடம் பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இது வருமான வரி தொடர்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். ஆகவே இந்த ஆவணம் உங்கள் கையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
2. ஆதார் கார்டு (Aadhar Card)
பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் கண்டிப்பாக கேட்கப்படும். இது முகவரி மற்றும் அடையாளச் சான்று ஆவணமாக செயல்படுகிறது என்பதால் மிகவும் முக்கியமாகும்.
35
3. பே சிலிப் அல்லது பேங்க் ஸ்டேண்ட்மெண்ட்
கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனை அளவிட, வங்கி அல்லது பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களின் 3 மாத பே (Pay Slip) சமர்ப்பிக்கச் சொல்வார்கள். கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்கள் கையில் உள்ள ரொக்கத்தின் அடிப்படையில் உங்கள் பணப்புழக்கத்தை மதிப்பிடும். மொத்த சம்பளத்திற்கும் ஒருவர் கையில் பெறும் ரொக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதால் பே சிலிப் சமர்ப்பிக்க சொல்கின்றனர்.
உங்கள் நிறுவனத்தில் பே சிலிப் கொடுக்கவில்லை என்றால் சம்பளம் கிரெடிட் ஆகும் பேங்க் ஸ்டேட்மேன்டை கேட்பார்கள். கடைசி 6 மாதத்துக்கு பேங்க் ஸ்டேட்மேன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும். இப்போது பெரும்பாலன நிறுவனங்கள் பே சிலிப்க்கு பதிலாக பேங்க் ஸ்டேட்மெண்ட் தான் அதிகம் கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நிறுவனங்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதம் போன்ற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களையும் கேட்கலாம். மேலும் சில நிறுவனங்கள் உங்களின் சமீபத்திய சம்பள உயர்வு கடிதத்தையும் சில கடன் வழங்கும் நிறுவனங்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.
5. உத்தரவாதம் அளிப்பவர் (Guarantor)
பர்சனல் லோன் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் Reference Contactsஎன்ற பெயரில் உங்களின் தாய் அல்லது தந்தை, சகோதர்கள் ஆகிய நெருங்கிய உறவுகளின் செல்போன் எண்கள், விவரங்களையும் கேட்கின்றனர். இதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
55
6. கிரெடிட் ஸ்கோர் (Credit Score)
நீங்கள் பர்சனல் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியமானது. உங்களின் கடன் மதிப்பீடுகளை அளவிடும் கிரெடிட் ஸ்கோர் இதற்கு முன் வாங்கிய லோன்களை நீங்கள் சரியாக அடைத்துள்ளீர்களா? வேறு ஏதும் கடன்கள் நிலுவையில் உள்ளதா? என்பதை காட்டிக்கொடுத்து விடும். முன்பு 700 கிரெடிட் ஸ்கோர் இருந்தால் லோன் கிடைத்து விடும். ஆனால் கிரெடிட் ஸ்கோர் 750 ஆக இருந்தால் மிக எளிதாக லோன் கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.