555 நாட்கள் முதலீடு செய்தால் 7.50% வரை வட்டி: கியாரண்டி லாபம் தரும் டாப் வங்கிகள் எது தெரியுமா?

Published : Sep 30, 2026, 09:55 AM IST

பங்குச் சந்தை அபாயங்கள் இன்றி நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு 555 நாட்கள் கால அவகாசம் கொண்ட சிறப்பு நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. மூத்த குடிமக்களுக்கு 0.25% முதல் 0.50% வரை கூடுதல் வட்டி கிடைக்கிறது.

PREV
14
555 நாட்கள் முதலீடு செய்தால் 7.50% வரை வட்டியா?

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க அபாயங்கள் இல்லாமல், உறுதியான மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்கள் தொடர்ந்து சிறந்த தேர்வாக விளங்கி வருகின்றன. குறிப்பாக குறிப்பிட்ட கால அவகாசத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக, முன்னணி வங்கிகள் வழங்கும் 555 நாட்கள் கொண்ட சிறப்பு எஃப்டி திட்டங்களுக்குப் பொது குடிமக்களுக்கு 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வரையிலும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பைசாபஜார் (Paisabazaar) தளத்தின் செப்.16, 2026 நிலவரப்படியான தரவுகளின்படி, ஒப்பீடு செய்யப்பட்ட 6 வங்கிகளில் சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) 555 நாட்கள் கால அவகாசத்திற்கு அதிகபட்ச வட்டியை வழங்குகிறது.

24
முன்னணி வங்கிகளின் 555 நாட்கள் எஃப்டி வட்டி நிலவரம்

சிட்டி யூனியன் வங்கி (City Union Bank): அதிகபட்சமாக பொதுக் குடிமக்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதத்தை சிட்டி யூனியன் வங்கி வழங்குகிறது.

கர்நாடகா வங்கி (Karnataka Bank): அடுத்தபடியாக கர்நாடகா வங்கி, அதே 555 நாட்கள் காலத்திற்கு பொதுப் பிரிவினருக்கு 7.00% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.40% வட்டி வழங்குகிறது.

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): பொதுக் குடிமக்களுக்கு 6.75% , மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது.

இந்தியன் வங்கி (Indian Bank): பொதுப் பிரிவினருக்கு 6.65% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி வருமானம் கிடைக்கிறது.

கனரா வங்கி (Canara Bank): பொதுக் குடிமக்களுக்கு 6.60% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டி வழங்குகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India): இதில் உள்ள 6 வங்கிகளில் மிகக் குறைந்த அளவாக, பொதுப் பிரிவினருக்கு 6.55%, மூத்த குடிமக்களுக்கு 7.05% வட்டி வழங்கப்படுகிறது.

34
வங்கி வாரியான வட்டி விகித ஒப்பீட்டு அட்டவணை (555 நாட்கள்)

இந்த 6 வங்கிகளிலுமே பொது முதலீட்டாளர்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு 0.25% முதல் 0.50% வரை கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் சிட்டி யூனியன் வங்கி அதிகபட்சமாக 7.50% வட்டியும், கர்நாடகா வங்கி 7.40% வட்டியும் வழங்குகின்றன.

எனவே, முதலீட்டாளர்கள் எஃப்டி தொடங்குவதற்கு முன் கால அளவு மற்றும் தங்களுக்கான வாடிக்கையாளர் பிரிவை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்வது நல்லது. மேலும் வங்கிகளின் வட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால், முதலீடு செய்வதற்கு முன் வங்கியின் அண்மைக்கால வட்டி விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம்.

44
டிடிஎஸ் (TDS) வரி பிடித்தம் தொடர்பான விதிகள்

நிலையான வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிப்பு பொருந்தும். 60 வயதுக்கு உட்பட்ட பொதுக் குடிமக்கள்: ஒரு நிதியாண்டில் பெறப்படும் மொத்த வட்டி வருமானம் ரூ.50,000-ஐத் தாண்டினால் மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி (TDS) பிடித்தம் செய்யப்படும்.

மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்): ஒரு நிதியாண்டில் மொத்த வட்டி வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே டிடிஎஸ் வரம்பிற்குள் வரும். குறிப்பிட்ட காலத்திற்குள் உறுதியான & உத்தரவாதமான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த 555 நாட்கள் எஃப்டி திட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் பொருந்தக்கூடிய வட்டி விகிதம், வரி நடைமுறைகள் மற்றும் வங்கியின் அண்மைக்கால நிபந்தனைகளைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது சிறந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories