444 நாளில் கைமேல் பலன்! அதிக வட்டியுடன் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம்!

First Published | Dec 25, 2024, 6:01 PM IST

SBI Special Fixed Deposit Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு 'அம்ரித் விருஷ்டி' என்ற பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு சிறப்பு FD திட்டமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் நல்ல வட்டி விகிதத்தைக் கொடுக்கிறது.

Fixed deposit special schemes

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டும்  சிறப்பு பிக்சட் டெபாசிட் (Special Fixed Deposit) திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 16 ஜூலை 2024 அன்று தொடங்கப்பட்டது. மார்ச் 31, 2025 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Fixed Deposits

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம் ஒரு டெர்ம் டெபாசிட் திட்டமாகும். இதன் முதலீட்டுக் காலம் 444 நாட்கள். இத்திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வருடாந்திர வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்கள் 7.75% வட்டி விகிதத்தைப் பெறலாம். உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tap to resize

SBI Special Fixed Deposit

இந்தத் திட்டம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்தவற்கு மட்டும்தான். இந்த விதி புதிய டெபாசிட்டுகள் மற்றும் ஏற்கனவே உள்ள டெபாசிட்களை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கும் பொருந்தும். ரெக்கரிங் டெபாசிட், வரி சேமிப்பு வைப்புத்தொகை, வருடாந்திர வைப்புத்தொகை போன்ற பிற டெபாசிட்களுக்கு இது பொருந்தாது.

SBI FD Schemes

திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யவேண்டும். மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படும். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு 0.50% அபராதத்துடன் முன்கூட்டியே கணக்கை மூட அனுமதி உண்டு. இதேபோல, ரூ.5 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை டெபாசிட் செய்தால் 1% அபராதத்துடன் டெபாசிட்டை திரும்பப் பெறலாம். முதலீடு செய்த 7 நாட்களுக்கு முன் பணத்தை எடுத்தால் வட்டி வழங்கப்படாது.

SBI FD interest

இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. முதலீடு செய்திருக்கும் தொகையின் அடிப்படையில் கடன் உதவியும் கிடைக்கும். TDS வட்டியில் கழிக்கப்படும்.

Special Fixed Deposits

வாடிக்கையாளர்கள் ஸ்டேட் வங்கி கிளைகள், YONO SBI மற்றும் YONO Lite மொபைல் செயலிகள் மூலமும் இன்டர்நெட் பேங்கிங் மூலமும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். பிக்சட் டெபாசிட்டில் முதலீட்டுக் காலத்தை 444 நாள் எனக் குறிப்பிட்டால் இந்தத் திட்டம் தானாகவே செயல்படுத்தப்படும்.

444 days special fixed deposit scheme

SBI அம்ரித் விருஷ்டி திட்டம் குறுகிய கால சேமிப்பு மற்றும் நல்ல வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழி. ஆனால், வட்டி விகிதத்தைப் புதுப்பிக்கும் வசதி இல்லாததால் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

Latest Videos

click me!