Rs 2000 Note
மே 9, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. க்ளீன் நோட் பாலிசியின் கீழ் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
2000 Rupee Note
இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 14 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் ரூ.7409 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு வரவில்லை. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திரும்ப ஒப்படைக்க காலக்கெடு விதிக்கப்பட்டது.
Reserve Bank of India
97.92 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. ஆனால் 2.08 சதவீத நோட்டுகள் இன்னும் வங்கிக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19 மே 2023 அன்று புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அன்று ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
Rs 2000 Currency Note
ஜூலை 31, 2024க்குள், பலர் இந்த நோட்டுகளை தங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளின் அளவை ரூ.7409 கோடியாகக் குறைத்துள்ளனர். அதாவது புழக்கத்தில் இருந்த 97.92 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளன.
Rs 2000 Notes Withdrawal
மொத்தம் ரூ.3.48 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் வங்கி முறைக்கு திரும்பியுள்ளன. ஆனால் புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 2.08 சதவீதம் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.