BH நம்பர் பிளேட் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி?

Published : Nov 11, 2024, 11:21 AM IST

பலவிதமான நம்பர் பிளேட்களைக் கொண்ட கார்களை சாலையில் பார்க்கலாம். நம்பர் பிளேட்கள் மாநிலத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்துகளுடன் தொடங்குகின்றன. BH நம்பர் பிளேட் என்பது மாறுபட்டது.

PREV
15
BH நம்பர் பிளேட் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி?
BH Number Plate

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே BH நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. எல்லா மக்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே பிஎச் நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தவிர பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வங்கி ஊழியர்களும் BH நம்பர் பிளேட்டைப் பெறலாம். நிர்வாக சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

25
BH Number Plate

அதே நேரத்தில், நான்குக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் BH நம்பர் பிளேட் பெற விண்ணப்பிக்கலாம்.

35
BH Number Plate

BH நம்பர் பிளேட் வேலை காரணமாக தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ளது. இந்த நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள்  ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும்போது மீண்டும் வாகனத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. BH நம்பர் பிளேட் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். இந்த வாகனத்தை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

45
BH Number Plate

BH நம்பர் பிளேட்டைப் பெற, முதலில் MoRTH இன் வாகன போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம். படிவம் 20 ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனப் பணியாளர்கள் படிவம் 16 ஐ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது பணிச் சான்றிதழுடன் பணியாளர் ஐடியையும் வழங்க வேண்டும்.

55
BH Number Plate

தகுதி சரிபார்ப்புக்குப் பின், RTO அலுவலகத்தில் இருந்து BH நம்பர் பிளேட் பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கும். ஒப்புதல் கிடைத்ததும் கட்டணத்தைச் செலுத்தலாம். அதற்குப் பிறகு உங்கள் வாகனத்திற்கான BH தொடர் எண் உருவாக்கப்படும்.

click me!

Recommended Stories