வோல்க்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மார்ச் 2026ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பதிப்பில் பனோராமிக் சன் ரூஃப், பின்புற மசாஜ் சீட், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற வசதிகள் சேர்க்கப்படலாம். 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் TSI என்ஜின்கள் தொடரும் நிலையில், புதிய டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.