ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?

Published : Feb 26, 2026, 02:05 PM IST

இந்தியாவில் 2 லட்சம் யூனிட் விற்பனையை கடந்து இந்த கார் சாதனை படைத்துள்ளது. மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக விளங்கும் இந்த 7 சீட்டர் கார் ஜிஎஸ்டி காரணமாக குறைக்கப்பட்ட விலை, இதை குடும்பங்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வாக மாற்றியுள்ளது.

PREV
14
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்

இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கும் டாக்சி சேவைகளுக்கும் 7 சீட்டர் கார்கள் அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரெனால்ட் டிரைபர், மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டியாக மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டு அறிமுகமான இந்த எம்பிவி மாடல், இப்போது 2 லட்சம் யூனிட் விற்பனையை கடந்துள்ளது.

24
2 லட்சம் விற்பனையை கடந்தது

ஜனவரி 2026 வரை 2,00,253 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. மேலும் சில கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், 2026ஆம் நிதியாண்டில் மீண்டும் வளர்ச்சி பாதை உள்ளது.

34
டிரைபர் ஃபேஸ்லிஃப்ட்

டிரைபர் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் அறிமுகமாகியுள்ளது. புதிய முன்புற வடிவமைப்பு, எல்இடி ஹெட்லைட்கள், புதுப்பிக்கப்பட்ட கிரில் ஆகியவை கவர்ச்சியை அதிகரித்துள்ளன. ஆனால் எஞ்சினில் பெரிய மாற்றங்கள் இல்லை.

44
குறைந்த விலையில் குடும்ப கார்

GST 2.0 அமலுக்கு வந்ததையடுத்து அடிப்படை மாடலின் விலை ரூ.54,000 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரம்ப விலை ரூ.5.76 லட்சமாக உள்ளது. மேலும் ரூ.8.39 லட்சம் வரை செல்கிறது. குறைந்த விலை, 7 இருக்கை வசதி மற்றும் பராமரிப்பு சுலபம் ஆகியவை டிரைபரை குடும்பங்களின் விருப்பத் தேர்வாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories