டெல்லி, குருகிராம், நொய்டா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், கொல்கத்தா, கொச்சி, புவனேஸ்வர், திருவனந்தபுரம், சண்டிகர், லக்னோ, கோயம்புத்தூர், சூரத், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா, சிம்லா, ஆக்ரா, ஜான்சி, குவாலியர், வாப்பி, பரோடா, கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வின்காஸ்டின் முதல் டீலர்ஷிப்கள் அமைக்கப்படும். அதிகரித்து வரும் மின்சார வாகன விற்பனையையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் கருத்தில் கொண்டு இந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது வலையமைப்பை 35 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்த வின்காஸ்ட் திட்டமிட்டுள்ளது.