வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், 2026-க்குள் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைய உள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு, ஸ்மார்ட் டெக்னாலஜி மற்றும் போட்டி விலையில் புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனம் வின்பாஸ்ட், இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது. இந்திய பயனர்களின் தேவைகள் மற்றும் சாலை நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்கள், 2026 இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு, ஸ்மார்ட் டெக்னாலஜி மற்றும் போட்டி விலைகள் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி EV நிறுவனங்களுக்கு சவால் விடுவதே வின்பாஸ்ட்-ன் இலக்காகும்.
25
VinFast scooter launch 2026
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதிகரித்து வரும் ஆதரவு, நகர்ப்புற பயணத் தேவைகளும் வின்பாஸ்ட்-க்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால், வின்பாஸ்ட் ஸ்கூட்டர்கள் அறிமுகமானால், மின்சார மொபிலிட்டி துறையில் தேவையும் போட்டியும் மேலும் அதிகரிக்கும். இந்திய சந்தைக்கேற்ற வகையில் பேட்டரி திறன், ரெஞ்ச் மற்றும் கனெக்டெட் அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35
VinFast EV scooters
வின்பாஸ்ட், தனது மின்சார ஸ்கூட்டர் உலகளாவிய விரிவாக்கத்திற்காக இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை முதற்கட்ட சந்தைகளாக தேர்வு செய்துள்ளது. இதில் வின்பாஸ்ட் Flazz, Evo, Feliz II மற்றும் Viper போன்ற மாடல்கள் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை பேட்டரி-ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்துடன் வருவதால், சார்ஜிங் நேரம் குறைந்து பயனர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.
இந்த தயாரிப்புகளை ஆதரிக்கும் வின்பாஸ்ட், V-Green நிறுவனத்துடன் இணைந்து சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்று (பேட்டரி ஸ்வாப்பிங்) உட்கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 2027-க்குள் நூற்றுக்கணக்கான ரீடெயில் அவுட்லெட்டுகளை அமைத்து, டீலர் நெட்வொர்க், சர்வீஸ் சென்டர் மற்றும் நிதி வசதிகளை ஒருங்கிணைக்கும் வணிக மாதிரியை செயல்படுத்தும் நோக்கமும் உள்ளது.
55
Vietnam electric vehicle company
2025 ஆம் ஆண்டு வியட்நாமில் மட்டும் 4,06,453 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, அந்த நாட்டின் ஸ்கூட்டர் சந்தையில் வின்பாஸ்ட் இடம் பிடித்தது. இதே வெற்றியை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் மீண்டும் பெற வேண்டும் என்பதே நிறுவனத்தின் நீண்டகாலத் திட்டமாகும். போட்டி விலை மற்றும் வலுவான உற்பத்தி திறன் மூலம், இந்திய EV இருசக்கர சந்தையில் வின்பாஸ்ட் ஒரு முக்கிய வீரராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.