7 சீட்டர் ட்ரைபருக்கு பெரிய அப்டேட்.. பட்ஜெட் காரில் பிரீமியம் அப்டேட்!

Published : Apr 18, 2026, 01:37 PM IST

ரெனால்ட் தனது ட்ரைபர் மாடலை ஒரு பெரிய அப்டேட்டுடன் களமிறக்க உள்ளது. இந்த அப்டேட்டில், பூட் ஸ்பேஸை பாதிக்காத புதிய ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி அமைப்பு மற்றும் கைகரில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

PREV
15
ரெனால்ட் ட்ரைபர் அப்டேட்

பட்ஜெட் 7-சீட்டர் செக்மென்டில் அமைதியாக இருந்த சமநிலையை சற்று குலைக்கும் மாதிரி ஒரு பெரிய ரெனால்ட் தனது ரெனால்ட் ட்ரைபர் மாடலை புதுப்பிக்கத் தயாராகிறது. இந்த முறை வெளிப்புற டிசைன் மட்டும் அல்ல, உள்ளே மறைந்திருக்கும் மெக்கானிக்கலும் மாறப் போகிறது. குடும்ப பயணங்களுக்கு ஏற்ற பயன்பாடு, செலவு குறைப்பு, டிரைவிங் சுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைக்கும் திசையில் இந்த அப்டேட் நகர்கிறது. அதனால், “அதிக ஸ்பேஸ் + குறைந்த செலவு” என்ற சமன்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் புதிய ட்ரைபரை பார்க்கலாம்.

25
ட்ரைபர் சிஎன்ஜி கார்

இந்த அப்டேட்டின் ஹீரோ அம்சம் சிஎன்ஜி அமைப்பே. வழக்கமாக டீலர்-ஃபிட்டட் கிட்கள் பூட் ஸ்பேஸை சுருக்கிவிடும். ஆனால் இப்போது ரெனோ, ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி சிஸ்டத்தை காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பின்புற லக்கேஜ் இடம் கிட்டத்தட்ட முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பெரிய குடும்பம், நீண்ட டிரிப், கூடுதலான சுமைகள்... எதற்கும் இடமில்லை என்ற பிரச்சனை குறையும். பயன்பாடு என்றால் காரே விளக்கிக் காட்டும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது.

35
புதிய ட்ரைபர் கார்

இந்த முடிவின் பின்னணி தெளிவாகவே உள்ளது. இந்தியாவில் எரிபொருள் செலவுகள் ஏறிக்கொண்டே இருக்க, சிஎன்ஜி ஒரு நிதானமான மாற்று வழியாக மாறியுள்ளது. மைலேஜ் நல்லது, ஓட்டும் செலவு குறைவு, பராமரிப்பு சுலபம். குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு, மாதாந்திர செலவில் பெரிய வித்தியாசம் தரும். அதனால் தான் சிஎன்ஜி-ஐ ‘ஆப்ஷன்’ என்பது அல்ல, ‘மெயின் ஸ்ட்ரீம்’ தீர்வாக ரெனோ பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

45
டர்போ இன்ஜின் ட்ரைபர்

பவர் பக்கம் பார்த்தால், புதிய ட்ரைபர் சற்றும் சலிப்பூட்டாது. ரெனால்ட் கைகரில் உள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இங்கேயும் வர வாய்ப்பு உள்ளது. சுமார் 100 bhp சக்தி, 160 Nm டார்க்… நகரத்தில் ஸ்மூத், ஹைவேயில் உற்சாகம் என்ற கலவை. மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் தேர்வுகளும் சேர்ந்து, “பயன்பாடு மட்டும் அல்ல, ஓட்டுவதும் ரசிக்கலாம்” என்ற உணர்வைத் தரும்.

55
7 சீட்டர் கார்

இந்த மாற்றங்களை தாங்கிக் கொள்ள, காரின் அடிப்படை அமைப்பு மேம்படுகிறது. பழைய CMF-A பிளாட்ஃபார்மிலிருந்து, புதிய RGEP (ரெனால்ட் Global Entry Platform) நோக்கி மாற்றம் நடக்கிறது. இதனால் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ், பாதுகாப்பு அம்சங்கள், புதிய எரிபொருள் தொழில்நுட்பங்கள் எல்லாம் எளிதாக இணைக்க முடியும். ஒரே வரியில் சொன்னால், புதிய ட்ரைபர் என்பது ஒரு ‘பேட்ஜெட் MPV’ மட்டும் அல்ல. புத்திசாலியான குடும்பங்களுக்கான சிந்தனை மிக்க அப்கிரேடு ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories