மூல விலையில் இருந்து Base மாடலின் விலை ரூ.1.36 லட்சம் இருந்தது, ஆனால் புதிய விலையில் ரூ.1.25 லட்சமாக குறைந்துள்ளது. மத்திய டிரிம் ரூ.1.61 லட்சம் இருந்தது. தற்போது ரூ.1.47 லட்சமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாப் டிரிம், அதிக வசதிகளுடன் கூடியது ஆகும். ரூ.1.74 லட்சம் விலை இருந்தது. தற்போது ரூ.1.59 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் லைட்னிங் பிளாக், மாக்மா ரெட், கிளேசியர் சில்வர், கரி எம்பர், நிம்பஸ் கிரே, மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ணங்களுடன் வருகிறது.