TVS iQube: 100% கேஷ்பேக்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது!

First Published | Dec 12, 2024, 10:06 PM IST

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் தனது TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 4.5 லட்சம் யூனிட் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

TVS iQube electric scooter offer

நீங்கள் TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், இது அதற்கான சிறந்த நேரமாக இருக்கும். இதுவரை டிவிஎஸ் இந்தியாவில் இந்த EV ஸ்கூட்டரை 4.5 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

TVS iQube Discount

டிசம்பர் 12ஆம் தேதி காலை 12:00 மணி முதல் டிசம்பர் 22ஆம் தேதி இரவு 11:59 மணி வரை, 10 நாட்களுக்கு மட்டும் இந்தச் சலுகை கிடைக்கும். இந்த நாட்களுக்குள் TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் 100% கேஷ்பேக்கை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறவார்கள்.

Tap to resize

TVS electric scooter

TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.2 kWh, 3.4 kWh மற்றும் 5.1 kWh பேட்டரிகளுடன் பல வகைகளில் விற்பனைக்கு உள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சத்தில் தொடங்கி ரூ.1.85 லட்சம் வரை உள்ளது. வேரியண்டை பொறுத்து விலை மாறுபடுகிறது. iQube பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ முதல் 150 கிமீ வரையிலான பயணம் செய்யலாம்.

TVS e-scooter cashback offer

மிட்நைட் கார்னிவல் என்று அழைக்கப்படும் இந்த ஆஃபர் அமலில் உள்ள நாட்களில், தினமும் ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இப்படி ஒவ்வொரு நாளும் தேர்வாகும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் தங்களுடைய TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முழுமையாக (100%) கேஷ்பேக் பெறுவார்கள். TVS டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாங்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

TVS iQube 100% cashback

அதுமட்டுமின்றி, இந்த சலுகை அறிவிக்கப்படுவதற்கு முன்பே iQube ஐ முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் இதில் வாய்ப்ப உண்டு. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் சலுகை அமலில் உள்ள நாட்களுக்குள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருக்க வேண்டும்.

Buy TVS iQube Online

பொதுவாக TVS iQube வாங்குபவர்கள் அனைவரும் ரூ.30,000 வரை உத்தரவாதமான பலன்களை அனுபவிக்கப் பெற முடியும். 3.4 kWh வேரியண்டுக்கு 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ பயணத்துக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாகக் கிடைக்கும். 2.2 kWh வேரியண்டுக்கு 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ பயணத்துக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாகக் கிடைக்கும்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டிவிஎஸ் டீலர்ஷிப்பை அணுகலாம் அல்லது அதிகாரப்பூர்வ TVS iQube இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Latest Videos

click me!