அந்த தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தல். பாஜகவிற்கு நன்றியாக இருப்பேன் என தற்போது எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி காப்பாற்றி கொடுத்தது பாஜக என கூறும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்ற தேர்தல், பாஜகவால் பல லாபங்களை அனுபவித்த எடப்பாடி பழனிச்சாமி எதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
பாஜகவுக்கு முக்கியமான தேர்தல் என்ற நேரத்தில் ஏன் அப்போது வெளியே ஓடிவந்தீர்கள். இப்போதும் சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தன்மையற்றவர், துரோகத்தை தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்டி விட கூட செய்வார். ஆனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது தெரியவில்லை. விஜய் அவர் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும், அவர் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் கட்சி தொண்டர்களின் எண்ணம்.