ரூ.90 ஆயிரம் கூட இல்லை.. குறைந்த விலையில் வாங்கக் கூடிய 7 சிறந்த ஸ்கூட்டர்கள் லிஸ்ட்

Published : Oct 22, 2025, 08:56 AM IST

புதிய ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுபவர்களுக்காக, குறைந்த விலை, சிறந்த மைலேஜ் மற்றும் நவீன அம்சங்களுடன் கூடிய சில சிறந்த மாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஸ்கூட்டர்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதில் அடங்கும்.

PREV
17
ரூ.90,000க்குள் ஸ்கூட்டர்கள்

தீபாவளி பண்டிகை சீசனில் புதிய ஸ்கூட்டர் வாங்க நினைக்கிறீர்களா? விலை அதிகமாக இல்லாமல், அழகான டிசைன், மைலேஜ், மற்றும் நவீன அம்சங்களுடன் கிடைக்கும் சில சிறந்த மாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

27
டிவிஎஸ் ஜூபிடர் 125

இந்த பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125). இதன் டிரம் அலாய் மாடல் விலை ரூ.75,600 (டெல்லி எக்ஸ்-ஷோரூம்). ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்ட் என்ஜினுடன் வரும் இந்த ஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது. குடும்ப பயணிகளுக்கு மிகவும் வசதியானது.

37
ஹீரோ டெஸ்டினி 125

ஹீரோ டெஸ்டினி 125 VX OBD2B மாடல் ரூ.75,838 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு சுமார் 60 கிமீ மைலேஜ் தருகிறது. முக்கியமாக, இதன் ஆட்டோ-கான்சல் விங்கர் அம்சம் ஓட்டுபவர்களுக்கு ஒரு பெரிய பிளஸ் பாய்ண்ட்.

47
ஹோண்டா ஆக்டிவா 110

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா 110, ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.74,369 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “4 ஸ்ட்ரோக் SI என்ஜின்”, 12V பேட்டரி மற்றும் பர்ல் சைரன் ப்ளூ, ரெபெல் ரெட் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

57
சுசூகி ஆஷஸ் 125

சுசூகி நிறுவனத்தின் சுசூகி ஆஷஸ் 125 (Suzuki Access 125) ஸ்கூட்டர் 4-ஸ்ட்ரோக், ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்ட் என்ஜினுடன் வருகிறது. டெல்லியில் ஸ்டாண்டர்ட் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.77,284. 4.2 அங்குல TFT டிஜிட்டல் கன்சோல் இதன் சிறப்பு ஆகும்.

67
ஹீரோ ஸூம் 125

இந்த மாடலின் VX OBD2B விலை ரூ.80,494. இதன் ZX மாடலில் டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்ற வசதிகள் உள்ளன. இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

77
ஹோண்டா டியோ 125 & பஜாஜ் சேடக்

ஹோண்டா டியோ 125 ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.84,620 முதல், ஸ்மார்ட் மாடல் ரூ.89,570 வரை விலை கொண்டது. ஸ்மார்ட் கீ போன்ற வசதிகளுடன் வருகிறது. மின்சார ஸ்கூட்டராக பஜாஜ் சேடக் ரூ.1,09,500 விலை முதல் கிடைக்கிறது. இதில் 3.5 kWh பேட்டரி திறன் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories