1. டாடா நெக்ஸான்
இந்தியாவில் தற்போது கிடைக்கும் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி கார்களில், Tata Nexon விலை குறைவானது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 ஹெச்பி பவரையும், 260 Nm டார்க் திறனையும் வழங்கும். இது 6 ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் வருகிறது. நெக்ஸான் டீசல்-AMT மாடல் ஒரு லிட்டருக்கு 24.08 கி.மீ மைலேஜ் தரும். 10.25 இன்ச் தொடுதிரை, காற்றோட்டமான இருக்கைகள் உள்ளன.