1. ரெனால்ட் ட்ரைபர்
Renault Triber கார்கள் RXE, RXL, RXT மற்றும் RXZ ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.9.02 லட்சம் வரை உள்ளது. அனைத்து வகைகளிலும் ஏழு பேர் வரை பயணிக்கலாம். மூன்றாவது வரிசை இருக்கைகளை மடிக்கும்போது, இது 5-சீட்டர் காராக மாறி, பூட் இடவசதி 84 லிட்டரிலிருந்து 625 லிட்டராக அதிகரிக்கிறது. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம். இதனால், அதிக பயணிகள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்த காரில் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் பின்புற ஏர் கண்டிஷனிங் வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏர் கண்டிஷனிங் ஆகியவை உள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஸ்டார்ட் அசிஸ்டன்ஸ் மற்றும் நான்கு ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.