90's விண்டேஜ் தோற்றம், நவீன டெக்னாலஜி: ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாஸ் ரெட்ரோ பைக்குகள்!

Published : Nov 03, 2026, 11:43 AM IST

ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ரெட்ரோ பைக்குகள்! Yamaha XSR155, Royal Enfield Hunter 350 முதல் TVS Ronin வரை... விலை மற்றும் மைலேஜ், சிறப்பம்சங்கள் முழு விவரம் பற்றி பார்ப்போம்.

PREV
16
ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ரெட்ரோ பைக்குகள்!

155cc லிக்விட்-கூல்டு எஞ்சின் முதல் 350cc ஏர்-கூல்டு எஞ்சின் வரை, நவீன கால கிளாசிக் மற்றும் ரெட்ரோ (Retro) ரக பைக்குகளுக்கு இந்தியாவில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யமஹா, ராயல் என்பீல்ட், டிவிஎஸ் மற்றும் கவாஸாகி போன்ற முன்னணி நிறுவனங்கள் பாரம்பரிய வடிவமைப்பும் நவீன தொழில்நுட்பங்களும் இணைந்த மலிவு விலை பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக்குள் கிடைக்கும் டாப் 5 என்ட்ரி-லெவல் ரெட்ரோ பைக்குகளின் விவரங்கள் பற்றி பார்ப்போம்.

26
1. Yamaha XSR155 ரூ.1,49,990 (எக்ஸ்-ஷோரூம்)

சமீபத்தில் அறிமுகமான யமஹா XSR155, ரெட்ரோ தோற்றத்தை நவீன அம்சங்களுடன் வழங்குகிறது. இதில் 155cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது (இந்த பட்டியலில் லிக்விட்-கூல்டு வசதி கொண்ட ஒரே பைக் இதுவே). இது 18.4PS பவரையும், 14.2Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் உண்டு.

லிட்டருக்கு 45.5 கி.மீ மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்படும் இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இதன் இருக்கை உயரம் (Seat height) 810 மி.மீ; எடை வெறும் 137 கிலோ மட்டுமே என்பதால் நெரிசலான சாலைகளிலும் எளிதாகக் கையாள முடியும். இதன் எஞ்சின் மற்றும் பல பாகங்கள் யமஹா R15 V4 மற்றும் MT-15 V2 மாடல்களில் இருந்து பெறப்பட்டவை. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு, எல்இடி முகப்பு விளக்கு மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) ஆகியவை இதில் உள்ளன.

36
2. Royal Enfield Hunter 350 ரூ.1,37,640 - ரூ.1,66,883 வரை (எக்ஸ்-ஷோரூம்)

ராயல் என்பீல்ட் ஹண்டர் 350 ஒரு முறையான கிளாசிக் ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இதில் 349cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 மாடலைப் போலவே ஆரம்ப வேகத்திலேயே 20.5PS பவரையும், 27Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் லிட்டருக்கு 36 கி.மீ ஆகும்; 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. இதன் இருக்கை உயரம் 790 மி.மீ ஆகவும், எடை வேரியண்ட்டைப் பொறுத்து 177 முதல் 181 கிலோ வரையிலும் இருக்கும். பாதுகாப்புக்கு டூயல்-சேனல் ஏபிஎஸ், அனலாக் மற்றும் டிஜிட்டல் கலந்த மீட்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் வரிசையில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த ரெட்ரோ பைக் இதுவாகும்.

46
3. TVS Ronin ரூ.1,24,790 முதல் ரூ.1,59,390 வரை (எக்ஸ்-ஷோரூம்)

டி.வி.எஸ் ரோனின் என்பது நியோ-ரெட்ரோ க்ரூஸர், ஸ்கிராம்பிளர் மற்றும் ரோட்ஸ்டர் ஆகிய பாணிகளின் கலவையாகும். இதில் 225.9cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர் & ஆயில்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 20.4PS பவர் & 19.9Nm டார்க்கை 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் வழங்குகிறது. லிட்டருக்கு 42.95 கி.மீ மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்படும் இதில் 14 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இதன் இருக்கை உயரம் 795 மி.மீ, எடை 160 கிலோ ஆகும். முக்கிய அம்சங்களாக டூயல்-சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் வசதியுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் கன்சோல், ரைடிங் மோடுகள் (Ride modes), டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய தனித்துவமான தோற்றம் கொண்ட தினசரி பயன்பாட்டு பைக் இது.

56
4. Yamaha FZ-X ரூ.1,19,194  - ரூ.1,37,533 வரை (எக்ஸ்-ஷோரூம்)

ஸ்கிராம்பிளர் பாணி மற்றும் நிமிர்ந்து அமர்ந்து ஓட்டும் வசதியுடன் கூடிய மற்றொரு யமஹா மாடல் FZ-X ஆகும். இதன் வழக்கமான மாடலில் 149cc ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 12.4PS பவர் மற்றும் 13.3Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. கூடுதல் மைலேஜு இதில் மைல்ட்-ஹைப்ரிட் (Smart Motor Generator - SMG) வேரியண்ட்டும் கிடைக்கிறது. ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 53 கி.மீ மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது; 10 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டது. இதன் எடை 141 கிலோ, இருக்கை உயரம் 810 மி.மீ. எல்இடி ஹெட்லேம்ப், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு கொண்ட எல்சிடி கிளஸ்டர் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். கம்பீரமான ரெட்ரோ தோற்றமும் சிறந்த மைலேஜும் விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.

66
5. Kawasaki W175 ரூ.1,13,000 - ரூ.1,25,000 வரை (எக்ஸ்-ஷோரூம்)

கவாஸாகி W175 உண்மையான 90-களின் விண்டேஜ் (Vintage) பாணியைக் கொண்ட பைக் ஆகும். இதில் 177cc ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. இது 13PS பவர் மற்றும் 13.2Nm டார்க்கை உருவாக்குகிறது. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்குடன், லிட்டருக்கு 40 முதல் 45 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இருக்கை உயரம் 790 மி.மீ; இதன் எடை வெறும் 135 கிலோ மட்டுமே என்பதால், இந்த பட்டியலில் உள்ள பைக்குகளில் மிகவும் எடை குறைவான பைக் இதுவேயாகும். எளிய டபுள்-கிராடில் ஸ்டீல் ஃபிரேம், டெலஸ்கோபிக் ஃபோர்க், இரட்டை ரியர் ஷாக் அப்சார்பர்கள், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், அனலாக்-டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட் ஆகிய பழைய கால கிளாசிக் அமைப்புகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories