இந்திய இருசக்கர வாகன சந்தையில் நடுத்தரக் குடும்பங்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பட்ஜெட் விலையிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த நவீன வசதிகள், சிறந்த மைலேஜ் மற்றும் ரூ. 1 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் கிடைக்கும் டாப் 10 ஸ்கூட்டர்களின் விவரங்கள் இதோ!
1. டிவிஎஸ் இ-எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி (TVS XL 100 Heavy Duty)
இன்ஜின்: 99.7 சிசி
மைலேஜ்: சுமார் 60 - 65 கி.மீ/லிட்டர்
எக்ஸ்-ஷோரூம் விலை: தோராயமாக ரூ. 44,999 - ரூ. 60,160
சிறப்பம்சங்கள்: குறைந்த பட்ஜெட்டில் அதிக சுமைகளை ஏற்றிச் செல்லவும், கிராமப்புறக் கரடுமுரடான சாலைகளில் இயக்கவும் ஏற்ற ரக்கடான வடிவம். பராமரிப்பது மிகவும் எளிது.