10.25 அங்குல டச் டிஸ்பிளே, ஆறு ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் குளிர்சாதன கட்டுப்பாடு, வயர்லெஸ் மொபைல் சார்ஜர், காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், பயண வேக கட்டுப்பாடு, தானாக மடங்கும் பக்கக் கண்ணாடிகள், தள்ளிப் பூட்டாமல் திறக்கும் வசதி போன்ற பல அம்சங்கள் வழங்கப்படுகின்றன. சில ஹைவேரியண்ட் வகைகளில் 360 டிகிரி கேமரா, பார்வை மறைவு பகுதி கண்காணிப்பு, மழை உணரும் துடைப்பான், டயர் காற்றழுத்த கண்காணிப்பு உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன. பாதுகாப்பில் ஆறு ஏர்பேக்குகள், குழந்தை இருக்கைக்கான இணைப்பு அமைப்பு மற்றும் பின்புற சென்சார்கள் இடம்பெறுகின்றன.