அடிமட்ட ரேட்டுக்கு கார் வாங்கலாம்.. இப்ப கார் வாங்கினா 2 லட்சம் ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

Published : Sep 10, 2024, 11:28 AM ISTUpdated : Sep 10, 2024, 05:01 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'Festival of Cars' (கார்களின் திருவிழா) என்ற பெயரில் மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது டாடா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2.05 லட்சம் வரை சேமிக்க முடியும்.

PREV
17
அடிமட்ட ரேட்டுக்கு கார் வாங்கலாம்..  இப்ப கார் வாங்கினா 2 லட்சம் ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?
TATA Motors Festival of Cars

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'Festival of Cars' (கார்களின் திருவிழா) என்ற பெயரில் மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமான கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடியும் கூடுதல் பலன்களும் காத்திருக்கின்றன. இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு டாடா இந்தச் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. இப்போது டாடா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2.05 லட்சம் வரை சேமிக்க முடியும்.

27
TATA Motors Festival of Cars

வரும் அக்டோபர் 31, 2024 வரை இந்தச் சலுகைகள் கிடைக்கும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என அனைத்து ரக கார்களுக்கும் கார்களின் திருவிழாவில் சலுகைகள் கிடைக்கும். Tiago, Tigor, Nexon, Altroz, Safari மற்றும் Harrier போன்ற பிரபலமான கார்களை குறிந்த விலையில் வாங்கலாம்.

37
TATA Motors Festival of Cars

தேர்ந்தெடுக்கும் மாடல் மற்றும் வேரியண்டை பொறுத்து சலுகைகளும் மாறுபடுகிறது. ஆனால், இந்தச் சிறப்பு விழாக்காலச் சலுகை விற்பனையில் டாடா Punch மற்றும் சமீபத்திய அறிமுகமான Curvv ஆகியவற்றுக்கு எந்தவிதமான தள்ளுபடியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

47
TATA Motors Festival of Cars

டாடா டியாகோ இப்போது ரூ.4.99 லட்சம் விலையில் வழங்கப்படுகிறது, வேரியண்டை பொறுத்து ரூ.65,000 வரை தள்ளுபடி பெறலாம். டாடா டிகோர் ரூ.30,000 விலைக் குறைப்புடன் ரூ.5.99 லட்சத்திலும், அல்ட்ராஸ் ரூ.45000 விலை குறைந்து ரூ.6.49 லட்சத்திலும் கிடைக்கிறது. நெக்ஸான் காரை இப்போது ரூ.7.99 லட்சத்தில் வாங்கலாம். இதன் மூலம் ரூ.80,000 வரை சேமிக்க முடியும்.

57
TATA Motors Festival of Cars

சஃபாரி மற்றும் ஹாரியர் போன்ற டாடா மோட்டார்ஸின் பெரிய மாடல்களும் தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் போட்டியாளரான டாடா சஃபாரி ரூ.15.49 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளது. இதன் மூலம் ரூ.1.8 லட்சம் வரை சேமிக்கலாம். மறுபுறம், ஹாரியர் ரூ.14.99 லட்சம் விலையில் கிடைக்கும். இதில் ரூ.1.6 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது.

67
TATA Motors Festival of Cars

டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.45,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்பட பல கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆனால், இந்தக் கூடுதல் சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஷோரூம்களில் மட்டும் வழங்குகிறது.

 

77
TATA Motors Festival of Cars

டாடாவின் 'கார்களின் திருவிழா' பற்றி அறிமுகம் செய்து பேசியிருக்கும் தலைமை வணிக அதிகாரி திரு. விவேக் ஸ்ரீவத்சா, “பண்டிகைக் காலத்தை ஒட்டி, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை வாங்கும்போது ரூ. 2.05 லட்சம் வரை சேமிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். அழகிய வடிவமைப்புடன் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை வாங்க இதுதான் சரியான நேரம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories