Tata Avinya EV : ஒரு சார்ஜில் 500 கிமீ.. டாடா காருக்கு இந்தியாவே காத்திருக்குது.. முழு அம்சங்கள் இதோ!

Published : May 20, 2026, 11:04 AM IST

டாடா மோட்டார்ஸ் தனது புதிய பிரீமியம் சப்-பிரான்டான 'அவின்யா' மூலம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது. 500 கிமீக்கும் அதிகமான ரேஞ்ச், அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் எதிர்கால பிரீமியம் அம்சங்களுடன் வரவுள்ளது.

PREV
15
டாடா அவின்யா கார்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தற்போது தனது அடுத்த பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. சாதாரண இவிகளை தாண்டி, “பிரீமியம் எதிர்கால கார்” அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாகி வரும் புதிய சப்-பிரான்ட் தான் ‘அவின்யா’.

25
பிரீமியம் எலக்ட்ரிக் கார்

டாடா அவின்யா பிராண்டின் முதல் தயாரிப்பு மாடல், 2027 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக Avinya X Coupe-SUV என்ற மாடல் தான் முதலில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் கான்செப்ட் வடிவமைப்பு ஏற்கனவே ஆட்டோ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. "இது டாடாவா அல்லது வெளிநாட்டு லக்சுரி இவி-ஆ?" என்ற கேள்வி கூட சமூக வலைதளங்களில் எழுந்தது

35
டாடா அவின்யா அம்சங்கள்

இந்த புதிய இவி, டாடாவின் Gen 3 skateboard platform-ல் உருவாக்கப்பட உள்ளது. தட்டையான தரை வடிவமைப்பு, அதிக கேபின் இடம் மற்றும் எதிர்கால ஸ்டைலிங் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகக் கூறப்படுகின்றன. முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஒளிரும் 'T' லோகோ, கூர்மையான LED DRLகள், கூபே SUV நிழல் மற்றும் இரட்டை-டோன் சக்கரங்கள் ஆகியவை இந்த காருக்கு எதிர்கால தோற்றத்தை வழங்குகின்றன.

45
டாடா அவின்யா வசதிகள்

உட்புறத்தில் டச் ஸ்க்ரீன், முழு டேஷ்போர்டு ஸ்கிரீன் பேண்ட், லவுஞ்ச்-ஸ்டைல் ​​இருக்கை, பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ADAS, 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், V2L மற்றும் V2V போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
500 கிமீக்கு மேல் மைலேஜ்

முக்கியமாக, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீக்கும் மேல் செல்லும் திறன் மற்றும் அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இந்த காரின் மிகப்பெரிய USP ஆக பார்க்கப்படுகிறது. ரூ.35 லட்சத்திற்கும் அதிக விலையில் அறிமுகமாகலாம் என கூறப்படும் டாடா அவின்யா, இந்திய இவி மார்க்கெட்டில் டாடாவை பிரீமியம் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவுக்குள் இன்னும் வலுவாக கொண்டு செல்லும் முயற்சி பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories