Top 4 Scooters: பைக் ரேஞ்சுக்கு வேகம்! செம கெத்தான ஸ்டைல்! மார்க்கெட்டை கலக்கும் 4 மாஸ் ஸ்கூட்டர்கள்

Published : May 17, 2026, 10:10 AM IST

150cc Scooters: இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், 150சிசி பிரிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் நான்கு மாஸ் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே பார்க்கலாம். டிவிஎஸ் என்டார்க், ஹீரோ ஸூம் 160, யமஹா ஏராக்ஸ் 155, ஆகியவற்றின் ஸ்டைல் சிறப்பு அம்சங்கள் இங்கே பார்க்கலாம்.

PREV
15
வாடிக்கையாளர்களை கவரும் 4 மாஸ் ஸ்கூட்டர்கள்

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், கியர் இல்லாத ஸ்கூட்டர்களில் வேகம் மற்றும் ஸ்டைலை விரும்பும் இளைஞர்களுக்காக 150cc செக்மென்ட் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த வரிசையில் ஸ்டைல், அட்வென்ச்சர், வேகம், சொகுசு எனப் பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வரும் 4 மாஸ் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

25
டிவிஎஸ் என்டார்க் 150

நகரச் சாலைகளில் அக்ரெஸிவ் லுக்கோடு, அதிவேகமாகப் பயணிக்க விரும்பும் இளைஞர்களின் முதல் சாய்ஸ் இந்த ஸ்கூட்டர் தான். போர் விமானங்களின் கூர்மையான வடிவமைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. SmartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் கொண்ட நவீன டிஜிட்டல் கன்சோல். தேவைக்கேற்ப செயல்திறன் மற்றும் மைலேஜை மாற்றிக்கொள்ளும் ரைடிங் மோடுகள். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.10 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

35
ஹீரோ ஸூம் 160

ஸ்கூட்டரிலேயே கரடுமுரடான சாலைகளிலும் லாங் ரைடு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரீமியம் 'மேக்ஸி-ஸ்கூட்டர்' இதுவாகும். 156சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இது இயங்குகிறது. உயரமான பிரண்ட் வைசர், பெரிய 14-இன்ச் வீல்கள், கீலெஸ் ஸ்டார்ட் , சைலன்ட் ஸ்டார்ட் வசதி மற்றும் மஸ்குலர் எல்இடி ஹெட்லைட். நீண்ட தூரப் பயணத்தின் போதும் அசதி தெரியாத சொகுசான சீட்டிங் மற்றும் பெரிய அண்டர்-சீட் ஸ்டோரேஜ். மேலும், சீட்டின் அடியில் போதுமான ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.39 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

45
யமஹா ஏராக்ஸ் 155

யமஹாவின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்கான R15-ல் இருக்கும் அதே பவர்ஃபுல் 155சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லா வேகத்திலும் சிறந்த டார்க்கை வழங்கும் வேரியபிள் வால்வ் ஆக்சுவேஷன் (VVA) தொழில்நுட்பம். டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், சிங்கிள்-சேனல் ABS மற்றும் வளைவுகளில் வழுக்காத அகலமான டயர்கள். Y-Connect ஆப் மூலம் மொபைலிலேயே ரியல்-டைம் மைலேஜ் மற்றும் சர்வீஸ் விபரங்களை அறியலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.44 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

55
வெஸ்பா எஸ் 150

பவர், ஸ்பீடு இதையெல்லாம் தாண்டி சாலையில் செல்லும் போது ஒட்டுமொத்த கூட்டமும் உங்களையே திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால், வெஸ்பா தான் ஒரே சாய்ஸ். இது வெறும் ஸ்கூட்டர் அல்ல, ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். 150சிசி எலக்ட்ரானிக் ஃபியூவல் இன்ஜெக்ஷன் (FI) இன்ஜின். இந்த ஸ்கூட்டர் சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. வெஸ்பாவின் சிக்னேச்சர் ஸ்டீல் பாடி என்பதால் அதிக பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. ரெட்ரோ லுக், பிரீமியம் குரோம் பேட்ஜிங் மற்றும் கவரும் வண்ணங்கள் கொண்ட கிளாசிக் இத்தாலியன் டிசைன். இது நகர நெரிசலில் ஒரு சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.41 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories