பிரெஸ்ஸா முதல் கைலாக் வரை: ரூ. 12 லட்சத்திற்குள் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட 5 பெஸ்ட் கார்கள்!

Published : Nov 27, 2026, 03:52 PM IST

ரூ. 12 லட்சத்திற்குள் மென்மையான டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டாப் 5 சிறந்த கார்களின் விலை, இன்ஜின் திறன், மைலேஜ் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.

PREV
16
குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் கார்கள்

தினசரிப் பயணங்களுக்கு ஆட்டோமேட்டிக் கார்கள் மிகவும் சௌகரியமானவை. ஆனால், பட்ஜெட் கார்களில் உள்ள ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் கியர் மாறும்போது சிறிய குலுக்கலையும், கோடையில் அதிக வெப்பமடையும் சிக்கலையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, ஹைட்ராலிக் திரவ இணைப்புடன் செயல்படும் பாரம்பரிய 'டார்க்-கன்வெர்ட்டர்' (Torque-Converter) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கடும் டிராஃபிக்கிலும் மிக மென்மையான, தடையற்ற ஓட்டுநர் அனுபவத்தைத் தருகிறது. இந்தியச் சந்தையில் ரூ. 12 லட்சத்திற்குள் (எக்ஸ்-ஷோரூம்) டார்க்-கன்வெர்ட்டர் வசதியுடன் கிடைக்கும் 5 சிறந்த கார்களின் விவரங்களை பற்றி பார்ப்போம்.

26
ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq)

விலை - ரூ. 9.29 லட்சம். குறைந்த ஆரம்ப விலையில் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் வசதி கொண்ட கார் இது. இதன் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 114 bhp ஆற்றலையும், 178 Nm டார்க்கையும் தருகிறது. 6 ஏர்பேக்குகள், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் 446 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட இது, சிறந்த கையாளுதலையும் செயல்திறனையும் விரும்புவோருக்கு ஏற்றது.

36
மஹிந்திரா XUV 3XO

விலை - ரூ. 9.99 லட்சம். 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் ஆகியவற்றை இக்கார் வழங்குகிறது. 200 Nm டார்க் தரும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-நட்சத்திர பாதுகாப்புத் தரம் கொண்ட இது, விசாலமான எஸ்யூவி காரை விரும்பும் குடும்பங்களுக்குச் சிறந்த தேர்வாகும்.

46
கியா சொனெட் (Kia Sonet)

விலை - ரூ. 10.00 லட்சம். டீசல் ஆட்டோமேட்டிக் காரை விரும்புவோருக்கு சொனெட் சிறந்த வாய்ப்பு. இதன் 1.5-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் 250 Nm என்ற பிரமாண்ட டார்க்கையும், லிட்டருக்கு 19 கி.மீ வரை மைலேஜையும் தருகிறது. சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன், அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

56
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

விலை - ரூ. 10.61 லட்சம். நம்பகமான 1.5-லிட்டர் 4-சிலிண்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் (102 bhp), பேடில் ஷிஃப்டர்கள் கொண்ட 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் இதில் உள்ளது. 6 ஏர்பேக்குகள், 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பரவலான சர்வீஸ் நெட்வொர்க் மூலம் குடும்ப வாடிக்கையாளர்களுக்கு இது மனநிம்மதியைத் தருகிறது.

66
மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் (Maruti Suzuki Fronx)

விலை - ரூ. 11.09 லட்சம். ஸ்டைலான கூபே-எஸ்யூவி டிசைன் கொண்ட இதில், 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 4.9-மீட்டர் சிறிய டர்னிங் ரேடியஸ் கொண்ட இது, நகர்ப்புறப் பயணங்களுக்கு மிக லாவகமானது.

Read more Photos on
click me!

Recommended Stories