ரிவர் இண்டி vs ஏதர் ரிஸ்டா: குடும்பத்திற்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? முழு ஒப்பீடு!

Published : Nov 26, 2026, 05:41 PM IST

ரிவர் இண்டி vs ஏதர் ரிஸ்டா: குடும்பத்திற்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? விலை, பேட்டரி ரேஞ்ச், 43 லிட்டர் இடவசதி மற்றும் ஸ்மார்ட் அம்சங்களின் முழு ஒப்பீடுகளை பற்றி பார்ப்போம்.

PREV
14
குடும்பத்திற்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் குடும்பத்திற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. அதிக இடவசதி, பின் சீட் சௌகரியம் மற்றும் சிறந்த ரேஞ்ச் ஆகியவற்றுடன் சந்தையில் முன்னணியில் உள்ள 'ரிவர் இண்டி' (River Indie) மற்றும் 'ஏதர் ரிஸ்டா' (Ather Rizta) ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முழுமையான ஒப்பீடுகளை பற்றி பார்ப்போம்.

24
விலை & வேரியண்ட்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எஸ்யூவி" (SUV) என அழைக்கப்படும் ரிவர் இண்டி, ஒரே ஒரு ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் ரூ.1.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 5 கலர்களில் கிடைக்கிறது. மறுபுறம், ஏதர் ரிஸ்டா ரூ.1.22 லட்சம் முதல் ரூ.1.61 லட்சம் வரையிலான விலையில், 'ரிஸ்டா S' மற்றும் 'ரிஸ்டா Z' ஆகிய பிரிவுகளில் 20 வேரியண்ட்களில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் குடும்பங்களுக்கு, ரிவர் இண்டியை விட ரூ.35,000 குறைவான விலையில் ஏதர் ரிஸ்டாவின் ஆரம்ப மாடல் கிடைப்பது பெரிய பிளஸ்.

34
பேட்டரி, ரேஞ்ச் & செயல்திறன்

ரிவர் இண்டியில் 4 kWh பேட்டரி மற்றும் 6.7 kW மோட்டார் (26 Nm டார்க்) உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 163 கி.மீ ரேஞ்ச் (நடைமுறையில் 120-130 கி.மீ) தரும். வீட்டு சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் ஆக 5 முதல் 8 மணி நேரம் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ ஆகும். இதில் ஈகோ, ரைடு, ரஷ் என 3 ரைடிங் மோடுகள் உள்ளன.

ஏதர் ரிஸ்டாவில் 4.3 kW மோட்டாருடன் 2 பேட்டரி தேர்வுகள் உள்ளன. 2.9 kWh பேட்டரி 123 கி.மீ ரேஞ்சையும், பெரிய பேட்டரி 160 கி.மீ ரேஞ்சையும் தருகிறது. ஏதரின் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 60 நிமிடங்களில் 80% சார்ஜ் செய்யலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இதில் ஸ்மார்ட் ஈகோ, ஜிப் மோடுகள் மற்றும் 'மேஜிக் ட்விஸ்ட்' (Magic Twist) பிரேக்கிங் வசதி உள்ளது.

44
இடவசதி & ஸ்மார்ட் அம்சங்கள்

இடவசதியைப் பொறுத்தவரை, ரிவர் இண்டி இருக்கைக்கு அடியில் 43 லிட்டர் இடத்தையும், பெரிய தட்டையான ஃபுட்போர்டையும் (Floorboard) கொண்டுள்ளது. ஏதர் ரிஸ்டா 34 லிட்டர் இடவசதியைக் கொண்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் ஏதர் ரிஸ்டா Z மாடல் 7-இன்ச் கலர் டிஎஃப்டி (TFT) திரை, புளூடூத், கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், ஃபால் சேஃப் (FallSafe) மற்றும் ஆட்டோ ஹோல்டு போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. ரிவர் இண்டி 6-இன்ச் எல்சிடி திரையுடன், இரட்டை டிஸ்க் பிரேக்குகள், சிபிஎஸ் (CBS) மற்றும் பெரிய 14-இன்ச் அலாய் வீல்களுடன் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டிலுமே ரிவர்ஸ் அசிஸ்ட், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் எல்இடி விளக்குகள் உள்ளன.

அதிக இடவசதி, வலிமையான கட்டமைப்பு மற்றும் வேகம் வேண்டுவோர் ரிவர் இண்டியையும்; பட்ஜெட் விலை, நவீன ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் பரவலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வேண்டுவோர் ஏதர் ரிஸ்டாவையும் தேர்வு செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories