இந்தியாவின் 2-வது நம்பர் 1 ஸ்கூட்டராகக் கொடிகட்டிப் பறக்கும் டிவிஎஸ் ஜூபிடர்: 1 கோடி ஸ்கூட்டர்கள் உற்பத்தி!

Published : Nov 25, 2026, 03:47 PM IST

தமிழ்நாட்டின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்படும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர், 1 கோடி யூனிட்கள் உற்பத்தி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

PREV
14
டிவிஎஸ் ஜூபிடர் 1 கோடி உற்பத்தி சாதனை

தமிழ்நாட்டின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்படும் 'டிவிஎஸ் ஜூபிடர்' (TVS Jupiter) ஸ்கூட்டர், மொத்தம் 1 கோடி யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் மாபெரும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்தபடியாக 1 கோடி உற்பத்தி என்ற இமாலய இலக்கைத் தொட்ட 2-வது ஸ்கூட்டர் பிராண்டாக ஜூபிடர் திகழ்கிறது. குறிப்பாக, மிகக் குறுகிய காலத்தில் இந்தச் சாதனையைப் படைத்த இந்தியாவின் அதிவேக மற்றும் இளமையான ஸ்கூட்டர் பிராண்ட் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

24
சாதனைப் பயணம்

கடந்த 2013-ஆம் ஆண்டு 110சிசி இன்ஜினுடன் அறிமுகமான டிவிஎஸ் ஜூபிடர், தனது முதல் ஆண்டிலேயே 5 லட்சம் விற்பனையைக் கடந்து சாதனை படைத்தது. முதல் 50 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தியை எட்டுவதற்கு 9 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட ஜூபிடர், அடுத்த 50 லட்சம் யூனிட்டுகளை வெறும் 4 ஆண்டுகளிலேயே தயாரித்து அசத்தியுள்ளது. தற்போது மாதந்தோறும் சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் விற்பனையாகி, இந்தியாவின் 2-வது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இது கொடிகட்டிப் பறக்கிறது.

34
அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வசதிகள்

அதிகம் (Zyada) என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், நடுத்தர மக்களின் அன்றாடச் சிரமங்களைத் தீர்க்கும் பல புத்திசாலித்தனமான வசதிகளைக் கொண்டுள்ளது.

வசதியான டிசைன் - இருக்கையைத் திறக்காமலேயே வண்டியின் முன்பக்கத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி (Front Fuel Fill) மற்றும் சீட்டின் அடியில் 2 ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவிற்குப் பிரம்மாண்டமான ஸ்டோரேஜ் இடவசதி ஆகியவை குடும்பத்தினருக்குப் பெரிதும் உதவுகின்றன.

பாதுகாப்பு & நிலைத்தன்மை - உறுதியான மெட்டல் பாடி மற்றும் வண்டி ஆடாமல் சமநிலையில் செல்ல உதவும் பாடி பேலன்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை பெண்கள் மற்றும் முதியவர்கள் கூடப் பயமின்றி ஓட்டுவதற்கு நம்பிக்கையைத் தருகின்றன.

44
ஜூபிடர் 110 & 125 இன்ஜின் திறன்

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 110சிசி மற்றும் 125சிசி என 2 பிரிவுகளிலும் ஜூபிடர் கிடைக்கிறது.

ஜூபிடர் 110 - புதிய தலைமுறை ஜூபிடர் 110 மாடலில் 113.3 சிசி இன்ஜின் உடன், கூடுதல் பிக்-அப் மற்றும் மைலேஜ் தரும் டிவிஎஸ் ஐகோ அசிஸ்ட் (TVS iGO Assist) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூபிடர் 125 - சற்று கூடுதல் பவர் வேண்டுபவர்களுக்காக 2021-ல் அறிமுகமான ஜூபிடர் 125 மாடலில் 124.8 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, 8.45 பிஹெச்பி (bhp) பவரையும் 11.1 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த 2 மாடல்களுமே தினசரி நகர்ப்புறப் பயணங்களுக்கு மிகச்சிறந்த மைலேஜையும் மென்மையான பயணத்தையும் தருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories