Mileage Tips: இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... வண்டி மைலேஜ் குறைய 100% கேரண்டி!

Published : Mar 30, 2026, 11:33 AM IST

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில், நம்முடைய டிரைவிங் ஸ்டைலில் சில சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வதன் மூலமும், வண்டியை சரியாகப் பராமரிப்பதன் மூலமும் மைலேஜை அதிகரிக்க முடியும்.

PREV
18
தொடர்ந்து ஏறும் பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட இந்த நேரத்தில், பைக், கார் ஓட்டும் பலரும் 'மைலேஜ் இன்னும் கொஞ்சம் கிடைத்தால் நல்லா இருக்குமே' என்றுதான் நினைக்கிறார்கள்.
28
செலவே இல்லாமல் மைலேஜை அதிகரிக்கலாம்!
தினமும் ஆபீஸ் போவதாக இருந்தாலும் சரி, ஊருக்கு லாங் டிரைவ் சென்றாலும் சரி, பெட்ரோலுக்கே பெரிய தொகை செலவாகிறது. ஆனால், உண்மையில் மைலேஜை அதிகரிக்க பெரிய செலவுகள் எதுவும் தேவையில்லை. நம்முடைய டிரைவிங் பழக்கத்தில் சில சிறிய மாற்றங்களைச் செய்தாலே போதும்.
38
மைலேஜை அதிகரிக்க எளிய வழிகள்
சில எளிய மாற்றங்கள் மூலம் உங்கள் பைக் மற்றும் காரின் மைலேஜை அதிகரிக்க முடியும். வண்டியில் இருக்கும் தேவையில்லாத எடையைக் குறைப்பது, சரியான இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்துவது போன்றவை எரிபொருள் சிக்கனத்திற்குப் பெரிதும் உதவும். இதோ, வாகனங்களின் மைலேஜை அதிகரிக்க சில சூப்பர் டிப்ஸ்.
48
டயர் பிரஷரை சரியாகப் பராமரியுங்கள்
டயரில் காற்று சரியான அளவில் இல்லையென்றால், வண்டி சாலையில் ஃப்ரீயாக ஓடாது. காற்று குறைவாக இருந்தால், டயர் ரோட்டில் தேய்ந்து ஓடும், இதனால் இன்ஜின் அதிக சிரமப்பட்டு பெட்ரோலை குடிக்கும். அதே சமயம், காற்று அதிகமாக இருந்தாலும் கிரிப் குறைந்து, சௌகரியம் போய், பிரேக்கிங் தூரம் அதிகரித்து மைலேஜை பாதிக்கும். அதனால், காற்று குறைந்தால் மட்டும் நிரப்பாமல், 2 வாரத்திற்கு ஒருமுறை பிரஷரை செக் செய்யுங்கள். பைக்/காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட PSI அளவை உற்பத்தியாளரே குறிப்பிட்டிருப்பார்கள். பிரஷர் சரியாக இருந்தால், பிக்கப் ஸ்மூத்தாக இருக்கும்.
58
இந்த பழக்கத்துக்கு குட்பை சொல்லுங்க!
டிராஃபிக்கில் நிறைய பேர் ஹாஃப் கிளட்ச்சில் வண்டியை ஓட்டுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. பைக்கில் இப்படிச் செய்யும்போது, உராய்வு அதிகரித்து, இன்ஜின் பவர் முழுமையாக வீல்களுக்குப் போகாது. இதனால் பெட்ரோல் வீணாகும். அதேபோல, காரில் க்ரால் மோடில் அடிக்கடி வேகமாக ஆக்சிலரேட் செய்து, திடீரென பிரேக் பிடிப்பதும் மைலேஜைக் குறைக்கும். இதற்கு எளிய தீர்வு, மெதுவாக ஆக்சிலரேட் செய்வது, ஒரே சீரான வேகத்தில் செல்வது, மென்மையாக பிரேக் பிடிப்பதுதான். சிக்னலை நெருங்கும்போதே வேகத்தைக் குறைத்தால், பிரேக் பயன்பாடு குறையும். தேவையில்லாமல் கிளட்சைப் பிடிக்காதீர்கள், சரியான கியரைப் பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால், பெட்ரோல் மிச்சமாவது நிச்சயம் தெரியும்.
68
ஏர் ஃபில்டர் & சரியான நேர சர்வீஸ்
சில சமயம், இன்ஜினுக்குத் தேவையான சுத்தமான காற்று கிடைக்காதது கூட மைலேஜ் குறையக் காரணமாக இருக்கலாம். ஏர் ஃபில்டர் அழுக்காக இருந்தால், இன்ஜினால் சரியாக 'சுவாசிக்க' முடியாது. அப்போது அதன் செயல்திறன் குறைந்து, அதிக பெட்ரோலைக் குடிக்க ஆரம்பிக்கும். அதனால், சர்வீஸுக்குப் போகும்போது, ஏர் ஃபில்டரை கண்டிப்பாக செக் செய்யச் சொல்லுங்கள். மற்றொரு முக்கிய விஷயம், சர்வீஸை தள்ளிப்போடுவது. தாமதமாக இன்ஜின் ஆயில் மாற்றுவது, செயின் லூப் செய்யாமல் விடுவது (பைக்), வீல் அலைன்மென்ட் சரியாக இல்லாதது (கார்) என எல்லாமே மைலேஜைக் குறைக்கும். சர்வீஸ் நேரம் சரியாக இருந்தால், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்கி, மைலேஜும் நன்றாக இருக்கும்.
78
இன்ஜின் ஆயிலின் தரம்
நிறைய பேர் செய்யும் பெரிய தவறு, 'எந்த ஆயில் ஊற்றினால் என்ன?' என்று நினைப்பதுதான். தவறான கிரேடு இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்தினால், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்காது. மிகவும் திக்கான ஆயிலைப் பயன்படுத்தினால், இன்ஜின் மீதான சுமை அதிகரித்து மைலேஜ் குறையும். வண்டி தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் கிரேடு ஆயிலை (பைக்/கார் மேனுவலில் இருக்கும்) பயன்படுத்துங்கள். அடுத்தது வேகம். அதிக மைலேஜ் வேண்டுமென்றால், மிக மெதுவாகப் போனாலும், மிக வேகமாகப் போனாலும் சிக்கல்தான். மெதுவாகப் போனால் குறைந்த கியரில் RPM அதிகமாக இருக்கும், வேகமாகப் போனால் காற்றின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். அதனால், சீரான வேகத்தில் செல்வது நல்லது.
88
காரின் மைலேஜை அதிகரிக்க சில வழிகள்
திடீர் பிக்கப், சடன் பிரேக் இரண்டுமே மைலேஜைக் குறைக்கும். ஸ்மூத்தான டிரைவிங்தான் உண்மையான ரகசியம். பைக்கில் பெரிய கேரியர், தேவையில்லாத ஆக்சஸரீஸ், பின் சீட்டில் எப்போதும் பொருட்களை வைத்திருப்பது போன்றவை மைலேஜைக் குறைக்கும். காரில், டிக்கியில் பயன்படுத்தாத பொருட்களை வைத்திருப்பது வாகனத்தின் எடையை அதிகரித்து, பெட்ரோல் செலவை அதிகரிக்கும். ரூஃப் ரேக் பயன்படுத்தினாலும் இழுவை அதிகரித்து மைலேஜ் குறையும்.
Read more Photos on
click me!

Recommended Stories