ரூ.500 க்குக் கிடைக்கும் யமஹா எலக்ட்ரிக் சைக்கிள்! 85 கி.மீ. நிற்காமல் ஓடும்!

First Published Sep 19, 2024, 1:20 PM IST

ரூ. 500 மட்டும் செலுத்தி யமஹா எலக்ட்ரிக் சைக்கிளை வாங்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கி.மீ. தூரம் இயங்கும் ரேஞ்ச் கொண்ட இந்த ஈ-சைக்கிள் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Yamaha electric cycle

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் PM E-Drive என்ற புதிய மின்சார வாகன மானியக் கொள்கை காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Yamaha electric cycle

மின்சாரத்தில் இயங்கும் நல்ல இருசக்கர வாகனங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை உள்ளது. அவற்றை வாங்க முடியாதவர்களுக்கு மின்சார சைக்கிள் சிறந்த தேர்வாக இருக்கும். யமஹா நிறுவனம் மின்சார சைக்கிள் விற்பனையில் தீவிரமாக இறங்கியுள்ளது. பலவகையான மாடல்களுடன் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் வருகின்றன. இவற்றின் ஆரம்ப விலை சுமார் 40,000 ரூபாயாக உள்ளது.

Latest Videos


Yamaha electric cycle

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைப் போலவே, எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. தவிர, வங்கிகளும் இவற்றுக்கு கடன் வழங்கி வருகின்றன. மற்ற வாகனங்களைப் போலவே இவற்றையும் 7 வருட EMI மூலம் வாங்கலாம். யமஹா எலக்ட்ரிக் சைக்கிளை ரூ. 500 மட்டும் முன்பணம் செலுத்தி வாங்கலாம். மீதமுள்ள தொகையை மாதாந்திர EMI-ல் செலுத்த வேண்டும். விலை மற்றும் தவணைக் காலத்தைப் பொறுத்து EMI தீர்மானிக்கப்படுகிறது. சில வங்கிகள் முன்பணம் இல்லாமல் வாங்கும் வசதியையும் வழங்கக்கூடும்.

Yamaha electric cycle

யமஹா எலெக்ட்ரிக் சைக்கிள் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. டிஎஃப்டி டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கலெக்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் நெகிழ்வான இருக்கை, முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக், ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், ஹெட்லைட் ரிப்ளக்டர் போன்ற பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. வாங்கும் சைக்கிளின் மாடலைப் பொறுத்து வசதிகளும் இருக்கும்.

Yamaha electric cycle

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் செயல்திறனும் சிறப்பாக உள்ளன. பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் வலுவானதாக உள்ளது. இந்த சைக்கிளில் 250 வாட் BLDC மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கு யமஹா 4 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

click me!