ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது ஷெர்பா இன்ஜின் பிளாட்ஃபார்மில் இந்திய சந்தைக்காக ஒரு புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கை உருவாக்கி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு, ஷெர்பா இன்ஜின் அடிப்படையில் இந்திய சந்தைக்கு ஒரு புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கை தயாரிக்கிறது. ஹிமாலயன் 450, கெரில்லா 450 பைக்குகளுக்கும் இதே பிளாட்ஃபார்மைதான் நிறுவனம் பயன்படுத்துகிறது. தகவல்களின்படி, இந்த புதிய மாடலுக்கு 'ஸ்க்ராம் 450' எனப் பெயரிடப்படும்.
25
லிக்விட்-கூல்டு இன்ஜின்
இந்த பைக்கைப் பற்றி இன்னும் அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும், 'ஷெர்பா' எனப் பெயரிடப்பட்ட 452cc சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் இதில் இருக்கும். இது 40 ஹார்ஸ்பவர் மற்றும் 40 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மூலம் வீல்களுக்கு பவர் செல்லும். இந்த பைக்கின் பாடி ஸ்டைலுக்கு ஏற்ப, இன்ஜின் ஒரு மாற்றியமைக்கப்பட்ட ஃபிரேமில் பொருத்தப்படும்.
35
சற்று உயரமான ஹேண்டில்பார்
இந்த பைக்கின் டிசைன் முற்றிலும் புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், வட்டவடிவ ஹெட்லைட், மெல்லிய டெயில் செக்ஷன், எரிபொருள் டேங்க் போன்ற சில பாகங்கள், கெரில்லா பைக்கில் உள்ளதைப் போலவே இருக்கலாம். மேலும், 'பியர் 650' பைக்கைப் போல, சற்று உயரமான ஹேண்டில்பார் மற்றும் நிமிர்ந்து உட்காரும் வகையிலான அமைப்பு இதில் இருக்கலாம்.
ஆட்டோகார் இந்தியா அறிக்கையின்படி, ஸ்க்ராம் 450 பைக்கில் முன்பக்கம் USD ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்படும். இந்த சஸ்பென்ஷன் பாகங்களின் ரேஞ்ச் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஸ்க்ராம் 411 மாடலை வைத்துப் பார்க்கும்போது, இது ஹிமாலயன் 450 பைக்கின் ரேஞ்சை விட குறைவாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.
55
என்னென்ன வசதிகள் இருக்கும்?
வசதிகளைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 450, அதன் முந்தைய மாடல்களின் அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வட்டவடிவ TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி, பல்வேறு ரைடு மோடுகள், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் போன்றவை இடம்பெறும். சந்தையில் அறிமுகமான பிறகு, இந்த பைக் ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 மாடலுடன் நேரடியாகப் போட்டியிடும்.