மார்ச் 2026-ல் இந்திய 150-200cc பைக் சந்தை 29% வளர்ச்சி கண்டுள்ளது. ஹோண்டா யூனிகார்ன், யமஹா மற்றும் ஹீரோவின் மாடல்களும் குறிப்பிடத்தக்க விற்பனையைப் பதிவு செய்துள்ளன.
இந்திய இருசக்கர வாகன சந்தையில் 150cc முதல் 200cc வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவு, 2026 மார்ச் மாதத்தில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.89 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, சுமார் 29 சதவீதம் உயர்வு உள்ளது. நகர்ப்புற மற்றும் புறநகர் பயனர்களிடையே தினசரி பயணத்துக்கும், சிறந்த செயல்திறனுக்கும் இந்த செக்மென்ட் மீது ஆர்வம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
26
பல்சர் விற்பனை உயர்வு
இந்த வளர்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் தொடர்ச்சி முக்கிய பங்காகியுள்ளது. மார்ச் 2026-ல் மட்டும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி, சந்தையில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிக வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது. குறிப்பாக, பல்சர் 180 மாதலின் மீள்பிரவேசம் விற்பனையை மேலும் தூண்டியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
36
அப்பாச்சி பைக் விற்பனை
இதே நேரத்தில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. சுமார் 47 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி, நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விளையாட்டுத்தன்மை கொண்ட வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் காரணங்களாக உள்ளன.
மூன்றாவது இடத்தில் ஹோண்டாவின் யூனிகார்ன் உள்ளது. நம்பகத்தன்மை மற்றும் சௌகரியமான ஓட்ட அனுபவம் காரணமாக, இந்த மாடல் தொடர்ந்து விற்பனையில் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. மேலும், யமஹா நிறுவனத்தின் FZ, MT-15, R15 போன்ற மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. புதியதாக அறிமுகமான XSR மாடலும் ஆரம்ப கட்டத்தில் நல்ல பதிலைப் பெற்றுள்ளது.
56
மிட் செக்மென்ட் பைக்
மற்றொரு முக்கிய அம்சமாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அட்வென்ச்சர் வகை பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதை இது வெளிப்படுத்துகிறது. KTM நிறுவனத்தின் 200 ட்யூக் மாடலும் விற்பனையில் உயர்வு கண்டுள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் இந்த விருப்பம் அதிகரித்து வருகிறது.
66
விலைக் குறைப்பு
மாறாக, சில மாடல்களில் விற்பனை சரிவு காணப்படுகிறது. குறிப்பாக ஹோண்டாவின் சில மாடல்கள் மற்றும் சுசூகியின் ஜிக்சர் வரிசை எதிர்பார்த்த அளவு விற்பனையை எட்டவில்லை. மொத்தத்தில், 150-200சிசி பிரிவில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது; வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கவர புதிய அம்சங்கள் மற்றும் விலைக் குறைப்பு முக்கிய பங்கேற்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.