ஜெல் பேட்டரி 60V/32AH வகை ரூ. 50,000 க்கும், 72V/42AH ரூ. 54,000 க்கும் கிடைக்கும். லித்தியம்-அயான் பேட்டரி 60V/30AH ரூ. 64,000 மற்றும் 74V/32AH ரூ. 69,000 வரையிலும் விலை கொண்டுள்ளது. அனைத்து வகைகளிலும் அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி. 60/72V BLDC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் டிரம் பிரேக்குகள், 12 இன்ச் சக்கரங்களுடன் 90/90 டயர்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, DRL, கீலெஸ் ஓட்டுதல், அண்டி-திஃப்ட் அலாரம், பார்கிங் கியர் மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.