Renault Garden
அந்த வகையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ என்ற கார் தான் இதுவரை இந்திய அளவில் மிகவும் விலை குறைவான காராக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் இப்பொது அந்த பெயரை தட்டி தூக்கும் அளவிற்கு அதிரடியான குறைந்த விலையில் விற்பனையாகி வருகின்றது ரெனால்ட்டின் க்விட் என்ற கார். ஆனால் விலை குறைவு என்பதற்காக இதில் அம்ஸங்களுக்கு எந்தவித குறிப்பதும் இல்லை. அம்சங்கள் ரீதியாகவும் இந்த கார் மிக சிறந்த காராக மாறியுள்ளது. சரி, ஒருவர் இந்த விலை மலிவான காரை ஏன் வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மோசமான போக்குவரத்து உள்ள உலகின் 10 நகரங்கள்.. பெங்களூரு லிஸ்டில் இருக்கு!
renault Kwid
ரெனால்ட் க்விட்-ன் எஞ்சின் திறன்
சந்தையில் பல நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த கார் சுமார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 67 பிஎச்பி ஆற்றலையும் 91 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்ட ஒரு அருமையான கார். இது ஐந்து வேக மேனுவல் மற்றும் ஐந்து வேக AMT கியர்பாக்ஸ் விருப்பத்தைக் கொண்டுள்ளது. மைலேஜ் பற்றி பேசுகையில், இந்த கார் சுமார் 22.3 kmpl திடமான மைலேஜ் தருவதாக ரெனால்ட் நிறுவனம் கூறுகிறது.
Kwid Features
ரெனால்ட் க்விட்-ன் அம்சங்கள்
மைலேஜ் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் Renault Kwid ஆனது Apple மற்றும் Android CarPlay கொண்ட, 8-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மின்சார ORVM, பகல்/இரவு IRVM, கீலெஸ் என்ட்ரி, மேனுவல் ஏசி, ரிவர்சிங் கேமரா, ESP, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. TPMS, இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் 14 அங்குல சக்கரங்கள் போன்ற சிறந்த அம்சங்கள் உள்ளன.
renault Kwid mileage
ரெனால்ட் க்விட் விலை
ரெனால்ட் க்விட் காரின் விலை பற்றி பேசுகையில், இந்த கார் பல வண்ண விருப்பங்களில் வருகிறது மற்றும் இதன் விலை ரூ.4.70 லட்சத்தில் இருந்து துவங்கி ரூ.6.33 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகிறது. ஆகவே இதுவரை சந்தையில் போட்டியின்றி சோலோவாக கலக்கி வந்த மாருதி ஆல்டோவிற்கு வலுவான பொடியாக மாறியுள்ளது ரெனால்ட் க்விட்.
வெறும் 1 லிட்டர் பெட்ரோலில் அதிக மைலேஜ் கொடுக்கும் டாப் 3 பட்ஜெட் பைக்குகள்!