Tata Nexon Offer: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்காக நெக்ஸான் எஸ்யூவி-க்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5-ஸ்டார் பாதுகாப்பு, பிரீமியம் அம்சங்களுடன் வரும் நெக்ஸான், இந்த ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள டாடா நெக்ஸான் மாடலுக்கு, டாடா மோட்டார்ஸ் இந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் மற்றும் டீலர்ஷிப்களைப் பொறுத்து, வாடிக்கையாளர்கள் ரூ.75,000 வரை மொத்த பலன்களைப் பெறலாம். இதில் ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் டீலர் சார்ந்த சலுகைகள் அடங்கும்.
25
பிரீமியம் அம்சங்களுடன் நெக்ஸான்
புதிய டாடா நெக்ஸான் எல்இடி டிஆர்எல்கள், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்கள், 10.25 இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.
நெக்ஸான், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5-ஸ்டார் குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீடு போன்ற அம்சங்களால் பாதுகாப்பில் முன்னணி எஸ்யூவி-களில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சிஎன்ஜி என மூன்று பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பல்வேறு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.
டாடா நெக்ஸானின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.7.40 லட்சம் முதல் ரூ.14.30 லட்சம் வரை உள்ளது. இந்த எஸ்யூவி, மாருதி சுசுகி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக விற்பனையாகிறது.
55
ஆகஸ்ட் கார் ஆஃபர்
தள்ளுபடி தொகை மாநிலம், நகரம், டீலர்ஷிப், வேரியன்ட், உற்பத்தி ஆண்டு மற்றும் ஸ்டாக் கிடைப்பதைப் பொறுத்து மாறுபடும். கார் வாங்குவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்பில் சலுகைகளை உறுதிப்படுத்துவது நல்லது.