பெட்ரோல் பங்கில் ஏமாறாதீங்க... ஜாக்கிரதையா இதை எல்லாம் நோட் பண்ணுங்க!

First Published Sep 15, 2024, 8:06 PM IST

Petrol pump tips: வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் போது கவனமாக ரீடிங்கைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

How to avoid Petrol Pump frauds

வாகன ஓட்டிகள் தினமும் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்பட வேண்டிய தேவை ஏற்படும். இதற்காக பெட்ரோல் பங்குகளுக்குச் செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் போது கவனமாக ரீடிங்கை கவனிக்க வேண்டும். ஏனென்றால், பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

Petrol Pumps in TamilNadu

விழிப்புடன் இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்க் மோசடியைத் தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடம். சில முன்னெச்சரிக்கை பழக்கங்களைப் பின்பற்றினால் பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். எப்போதும் விழிப்புடன் இருப்பதுதான் நல்லது.

Latest Videos


Petrol Pumps in India

எரிபொருள் நிரப்புவதற்கு முன் பம்ப் சீரமைப்பைச் சரிபார்க்கவும். உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதைக் குறிக்கும் முத்திரை மற்றும் ஸ்டிக்கரைச் சரிபார்க்கவும். ரீடிங்கில் குறிப்பிடுவதை விட குறைவான எரிபொருளை நிரப்ப வாய்ப்பு இருக்கக்கூடும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மேனேஜரிடம் புகாரளிக்கவும்.

Petrol Pump guidelines

எரிபொருள் நிரப்புவதற்கு முன்னும் பின்னும் பம்பில் மீட்டர் ரீடிங்கைக் கவனியுங்கள். வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு காட்டப்பட்ட அளவோடு ஒத்துப்போகிறது என்பதை உறுதிப்படுத்தவும். டிஸ்ப்ளே ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டால் வேறு பம்பில் இருந்து எரிபொருளை நிரப்பும்படி கேட்கவும்.

Petrol Pump empolyees

எரிபொருள் தரம் குறைவாக இருந்தால், வாகனத்தின் மைலேஜ் குறையும். எஞ்சின் செயல்திறனும் பாதிக்கப்படும். நிரப்பப்படும் பெட்ரோல் அல்லது டீசலின் தரத்தை அறிவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Petrol Pump Cheating

சில நேரங்களில் பெட்ரோல் விலை சில பங்குகளில் குறைவாக இருக்கலாம். அவர்கள் அருகிலுள்ள நிலையங்களை விட குறைவாக வழங்கலாம். ஆனால் அவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். மோசடியான வழிகளில் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சி செய்வதாக இருக்கலாம்.

Petrol Pump Awareness

எரிபொருள் நிரப்புபவரின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். முறையான அனுமதியின்றி பம்பை சேதப்படுத்தவோ, மீட்டரை சரிசெய்யவோ கூடாது. சந்தேகத்திற்கிடமான நடத்தையில் ஈடுபடுகிறாரா என்று எச்சரிக்கையாக இருங்கள். எரிபொருள் நிரப்பிய பிறகு ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சினை வந்தால் ரசீது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Petrol Pumps Tips

பெட்ரோல் டீசல் நிரப்பும் இடத்தில் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக நிலைய நிர்வாகத்திற்கும் உள்ளூர் நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தெரிவிக்கவும். பொதுவாக பெட்ரோல் பம்ப் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.

Petrol Pump Frauds

எரிபொருள் செலவு அதிகமாக உள்ள இன்றைய சூழலில் பெட்ரோல் பங்குகளில் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் எரிபொருள் நிரப்பும்போது மிகவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

click me!