எக்கசக்க தள்ளுபடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆகஸ்ட் 15 வரை ஓலா வழங்கும் சூப்பர் சலுகை!

First Published | Aug 2, 2023, 1:42 PM IST

Ola S1 Air EV: குறைந்த விலையில் கிடைக்கும் இந்த எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று ஓலா நிறுவனம் கருதுகிறது.

ஓலா அறிமுகச் சலுகை

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் நாட்டிலேயே நம்பர் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக உள்ளது. அந்நிறுவனத்தின் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் அறிமுக விலைச் சலுகை ஜூலை 31 வரை மட்டுமே இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி பகல் 12 மணி வரை இந்தச் சலுகையை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பவர் ஃபுல் பிராசஸர், கிராபிக்ஸ் அம்சங்களுடன் லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

OLA S1 Air

“S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக ரூ.1.10 லட்சம் அறிமுக விலை சலுகையை நீட்டிக்க பல கோரிக்கைகள் வந்தன. அதனால், ஆகஸ்ட் 15 மதியம் 12 மணி வரை அச்சலுகை நீட்டிக்கப்படுகிறது. விரைவான டெலிவரிக்கு சீக்கிரம் ஆர்டர் செய்யுங்கள்” என்று பாவிஷ் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.

ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முந்தைய S1, S1 Pro ஸ்கூட்டர்களைப் போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கிறது. ஆறு விதமான வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள 3KWH பேட்டரி பேக் மூலம் 125 கி.மீ. வரை பயணிக்க முடியும். 6 BHP பவர் கொண்ட ஹப் மவுண்ட் எலக்ட்ரிக் மோட்டார் இருக்கிறது.

Latest Videos


ஓலா ஸ்கூட்டர்

ஏலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தை 3.3 நொடிகளில் அடைந்துவிடலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ. இதில் ஸ்போர்ட்ஸ், எக்கோ, நார்மல் என மூன்று விதமான இயங்குமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரை 5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

பிளாட் பூட் போர்டு, ட்வின் ஷாக், டெலெஸ்கோபிக் போர்க், ட்ரம் பிரேக், போன்ற வசதிகளும் இருக்கின்றன. நேவிகேஷன் அம்சங்கள், மியூசிக் சிஸ்டம், டிஜிட்டல் கீ உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. மற்ற ஸ்கூட்டர்களைவிட குறைந்த விலையில் கிடைக்கும் இந்த எஸ் 1 ஏர் (S1 Air) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று ஓலா நிறுவனம் கருதுகிறது.

click me!