ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய ஆஃபர்! இந்த சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

First Published | Nov 3, 2024, 1:35 PM IST

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான தீபாவளி தள்ளுபடி முடிந்துவிட்டது. இப்போது அதன் உதிரி பாகங்களுக்கான தள்ளுபடியைக் வழங்கி வருகிறது. ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கு 50% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஓலாவின் உதிரி பாகங்களுக்கான சலுகையில் ஹெல்மெட், ஸ்கூட்டர் கவர் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதனுடன் சில காம்போ ஆக்சஸரீஸ் தள்ளுபடியையும் ஓலா வழங்குகிறது.

OLA S1 X E Scooter

ஓலா ஹெல்மெட்டை இப்போது ரூ.649க்கு விற்பனைக்கு உள்ளது. இந்த ஹெல்மெட்டின் அசல் விலை ரூ.999. இது ஒரு இலகு ரக ஓபன் ஹெல்மெட். இதை ஸ்டீல்பேர்ட் தயாரித்துள்ளது.

Tap to resize

ola s1 pro

ஸ்கூட்டர் கவர்களிளுக்கும் ஓலா தள்ளுபடி வழங்குகிறது. இதன் விலை ரூ.999 இல் இருந்து இப்போது ரூ.749க்கு குறைந்துள்ளது. இந்த கவர் பாலியஸ்டர் துணியால் ஆனது. இது அனைத்து வகையான வானிலையிலும் ஸ்கூட்டரைப் பாதுகாக்கும்.

இத்துடன் ஸ்கூட்டரில் பொருத்தும் Buddy Step ஐ ரூ.999க்கு வாங்கலாம். இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இது பின்னால் அமர்ந்து பயணிக்கும் நபர் கால்களை வசதியாக வைத்துள்ள உதவும்.

Buddy Step மற்றும் கவர் சேர்ந்த காம்போ சலுகையையும் ஓலா கொண்டுவந்துள்ளது. ரூ.2998 மதிப்புள்ள இந்த இரண்டும் இப்போது ரூ.1709-க்குக் கிடைக்கிறது. இவை தவிர, போர்ட்டபிள் சார்ஜர், சென்டர் ஸ்டாண்ட் போன்ற மற்ற உதிரி பாகங்களுக்கு ஓலா தள்ளுபடி வழங்கவில்லை.

இந்தச் சலுகைகள் எல்லாம் நவம்பர் 5ஆம் தேதி வரை மட்டுமே. இந்த அனைத்து உதிர பாகங்களும் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஓலாவின் மற்ற ஸ்கூட்டர்களில் இவற்றை பயன்படுத்த முடியாது. ஓலா உதிரி பாகங்களுடன் 999 ரூபாய்க்கு டி-ஷர்ட்களையும் விற்கிறது.

Latest Videos

click me!