ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சலுகை.. 3 நாள் மட்டும் ஆஃபர்.. உடனே முந்துங்க

Published : Mar 10, 2026, 09:59 AM IST

இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில், ஓலா எலக்ட்ரிக் 'ChampionMahotsav' என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன.

PREV
15
ஓலா எலக்ட்ரிக் சலுகைகள்

இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் வகையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சிறப்பு சலுகை கூறியது. இதன் ஒரு பகுதியாக ‘ChampionMahotsav’ என்ற பெயரில் மூன்று நாள் சிறப்பு பிரச்சாரத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ், ஓலா எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன.

25
ரூ.10,000 மதிப்பிலான நன்மைகள்

நாடு முழுவதும் நடைபெறும் இந்த குறுகிய கால சலுகை மூன்று நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், ஓலா எலக்ட்ரிக்கின் எந்தவொரு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிளையும் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்பிலான சலுகையை பெறலாம். இந்த அறிவிப்பு இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றியை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

35
ஓலா ஸ்கூட்டர் ஆஃபர்

இதற்கு முன்பாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற போது ‘Match Mahotsav’ என்ற சலுகை திட்டத்தை ஓலா எலக்ட்ரிக் அறிமுகப்படுத்தியது. அந்த சலுகைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக நிறுவனம் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில் தற்போது ‘ChampionMahotsav’ என்ற புதிய சலுகை திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது.

45
ஓலா S1 ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் தற்போது பல்வேறு வகையான மின்சார இருசக்கர வாகனங்களை சந்தையில் வழங்கி வருகிறது. Gen 3 S1 ஸ்கூட்டர் வரிசையில் S1 Pro+, S1 Pro, S1 X+ மற்றும் S1 X போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் S1 Pro+ மாடல் 5.2 kWh மற்றும் 4 kWh பேட்டரி தேர்வுகளுடன் கிடைக்கிறது. S1 Pro மாடல் 4 kWh மற்றும் 3 kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

55
ஓலா பைக் சலுகை

மேலும், S1 X+ மற்றும் S1 X மாடல்கள் பல்வேறு பேட்டரி திறன் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இதன் கூடுதலாக, ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ என்ற மின்சார மோட்டார் சைக்கிள் வரிசையும் சந்தையில் உள்ளது. இந்த வாகனங்களும் பல்வேறு பேட்டரி திறன்களில் கிடைக்கின்றன. ‘ChampionMahotsav’ சலுகை மூலம் இந்த அனைத்து மாடல்களுக்கும் ரூ.10,000 வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories